நாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் நேதாஜி

‘எனக்கு ரத்தத்தை தாருங்கள், உங்களுக்கு நான் சுதந்திரம் தருகிறேன்’ என்ற நேதாஜியின் அறைகூவல், நாட்டின் விடுதலைக்காக போராடிய லட்சக்கணக் கானோருக்கு உத்வேகத்தை அளித்தது. தனது சிந்தனைகள், வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் பல லட்சக்கணக்கான நாட்டுமக்களின் எண்ணங்களை தூண்டிவிட்டவர் அவர்.

தமிழகத்தில் நேதாஜியை பிரபலப்படுத்தியவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்தான். மக்கள்செல்வாக்கு மிகுந்த தலைவரான அவர், நேதாஜியின் நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தார். பார்வர்டு பிளாக்கின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகதிகழ்ந்த அவர், இந்திய தேசிய ராணுவத்திற்கு பெருமளவு ஆதரவை திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.

நமது வரலாற்று பாடப் புத்தகங்களில், உரிய அங்கீகாரம் தரப்படாமல் உள்ள சர்தார் வல்லபாய் படேல், வீரசாவர்க்கர் போன்ற தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை முதன்மைப்படுத்த வேண்டும். அவர்களுடைய தியாகங்களில் இருந்து நாம் உத்வேகம் பெற்று, வலிமையான தேசத்தை உருவாக்க பாடுபடவேண்டும்.

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. ஆனாலும், இன்னும் நிறைய செய்யவேண்டியது உள்ளது.

வறுமை, கல்வி அறிவின்மை, சமத்துவமின்மை, பலவீனமான ஆட்சி நிர்வாகம், மோசமான கட்டமைப்புவசதிகள், கழிப்பறை வசதிகள் இல்லாமை போன்ற சமூக கொடுமைகள் இன்னும் நமக்கு உறுத்தலாக இருக்கின்றன.

‘புதிய இந்தியாவை’ உருவாக்க நிகழ்கால சவால்களை வெற்றியாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்கு, நேதாஜியின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தில் இருந்தும், அவருடைய தொலை நோக்குப் பார்வை மற்றும் தேசியவாத கண்ணோட்டத்தில் இருந்தும் நாம் பலவிஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தியா முன்னேற்றகரமான மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். எனவே, இளைய சமுதாயம்தான் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அபரிமிதமான இந்த இளைய சமுதாயத்தின் சிந்தனை ஆற்றலை ஒரு முகப்படுத்தி, தேசத்தை கட்டமைப்பதற்கான புதுமையான முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தவேண்டும்.

நன்றி வெங்கய்யா நாயுடு 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...