நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து, ஜம்மு – காஷ்மீரில் பிரச்னை நீடித்துவருகிறது. அரசியலில் உள்ள சில குடும்பங்களும், சிலகட்சிகளும் சேர்ந்து, இந்த விவகாரத்தை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என நினைத்து, அதைத் தீர்க்க முனைப்பு காட்ட வில்லை. இதனால் அங்கு பயங்கரவாதம் அதிகரித்தது. ஆயிரகணக்கான அப்பாவிகள் உயிரிழந்தனர். பலர், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
நம் அண்டை நாடு, போரில் நம்மிடம், மூன்றுமுறை தோற்றுள்ளது. அந்நாட்டைதோற்கடிக்க, நமது முப்படைகளுக்கு, 10- – 12 நாட்களுக்குமேல் தேவைப்படாது. இதனால்தான், அவர்கள் பல ஆண்டுகளாக, நமக்கு எதிராக மறைமுகபோரை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்தியில் ஆட்சிக்குவந்த, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, நூற்றாண்டு காலமாக நீடித்துவந்த இந்தப் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்டை நாட்டின் மறைமுகப் போரை, இதற்குமுன்பு இருந்த அரசுகள், சட்டம், ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே பார்த்தன. தகுந்த பதிலடிகொடுக்க, நம் ராணுவத்தினருக்கு அனுமதி கொடுக்க வில்லை. ஆனால், இப்போது, அண்டை நாட்டின் மறைமுக போருக்கு பதிலடி கொடுக்க, ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு, ஜம்மு – காஷ்மீரில் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான சூழலை, கொண்டுவந்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்துவந்த, வடகிழக்கு மாநில மக்களின் ஆசைகள், எண்ணங்களை பேச்சு வார்த்தையின் மூலம், இந்த அரசு தீர்த்து வைத்துள்ளது.
போடோ ஒப்பந்தம், முத்தலாக் தடை, ஜம்மு – காஷ்மீரில், 370-வது பிரிவு ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாதனைகளை, இந்தஅரசு செய்துள்ளது. வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே, குடியுரிமைத் திருத்தசட்டம் கொண்டுவரப்பட்டது. சுதந்திரத்துக்கு முன், நாட்டின் பிரிவினையின்போது அநீதி இழைக்கப்பட்டது. நேரு – -லியாகத் அலிகான் இடையே நடந்த ஒப்பந்தத்தில், இருநாடுகளில் இருக்கும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டது. இதை மஹாத்மா காந்தியும் விரும்பினார்.
ஆனால், குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராகப்பேசும் சில அரசியல் கட்சிகள், வாக்குவங்கி அரசியலை நடத்துகின்றன. பாகிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு, இந்தியாவுக்கு அடைக்கலமாக வந்தவர்கள், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். நம் அரசின் முடிவுகள் குறித்து பரப்பிவிடப்படும் தவறான பிரசாரத்தால், சர்வதேசளவில், தேசத்தின் மதிப்புக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. நான், என்னுடைய கவுரவத்துக்காக உழைக்க வில்லை. தேசத்தின் கவுரவத்துக்காக உழைக்கிறேன். இவ்வாறு, மோடி பேசினார்.
உணவு தானியங்கள் மற்றும் உணவு பொருள் உற்பத்தியில், சர்வதேசளவில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு, விவசாயிகளின் கடின உழைப்பும், அரசின் கொள்கைகளும்தான் காரணம்.
நாட்டில், உருளைக்கிழங்கு உற்பத்தி, கடந்த, 10 ஆண்டுகளில், 20 சதவீதம் அதிகரித்துள்ளது. குஜராத்தில் மட்டும், 170 சதவீதம் அதிகரித்துள்ளது.0கடந்த, 20 ஆண்டுகளில், உருளைக் கிழங்கு உற்பத்தி மையமாக குஜராத் மாறியுள்ளது. அரசின், விவசாயம்சார்ந்த கொள்கை முடிவுகள், பாசனத்துக்கான நவீனவசதிகள் ஆகியவைதான் இதற்கு காரணம்.
நாட்டில், 6 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில், இந்த மாத துவக்கத்தில், 12 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு, சாதனை படைக்கப் பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை, 2022ம் ஆண்டுக்குள், இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், பாசனம் மற்றம் விவசாயம் தொடர்பான உள்கட்டமைப்புகளுக்கு, ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கு இடையே உள்ள துாரத்தை குறைப்பது தான் அரசின் முக்கிய நோக்கம். குறைந்த தண்ணீரில் சாகுபடி செய்யப்படும் தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |