மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது.
இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், குடிநீர், இயற்கை வள மேம்பாடு , உள்நாட்டு பாதுகாப்பு என அணைத்து துறைகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதார சரிவு, உள்நாட்டிலும் அதன் தாக்கத்தால் வரி வருவாய் சரிவு, அதனால் உருவான நிதி பற்றாக்குறை என்று ஒரு சிக்கலான கால கட்டத்திலும், அணைத்து துறைகளுக்கும் போதுமான நிதி சத்திய பட்டுள்ளது.
இங்கே கவர்ச்சி திட்ட அறிவிப்புகள் இல்லை, இலவசங்களுக்கு இடம் இல்லை என்பதாலோ!, என்னவோ!!, இரண்டு மணி நேர நீண்ட நெடிய, பல நூறு பக்கங்களை கொண்ட பட்ஜெட்டை, “ஒரு சில நிமிடங்களிலேயே படித்து இதில் ஒன்றும் இல்லை, மக்களை ஏமாற்றும் செயல்” என்று கருத்து கூறிய ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்ற அதி மேதாவிகளை என்ன வென்று சொல்வது. இவர்களது ஆட்சி காலத்தைய பட்ஜெட்டை அப்படியே வாசித்திருந்தால் கூட இவர்கள் இதே கருத்தை தான் கூறப் போகிறார்கள். .
இதற்காக இங்கே நாம் புள்ளி விவரங்களையோ, துறை வாரியாக ஒதுக்கப்பட்ட லட்சம் கோடிகளை பற்றியோ பத்தி பத்தியாக எழுதி தார்க்கம் செய்யப் போவதில்லை. எதார்த்தங்களையே பேசுவோம். உதாரணத்துக்கு சுகாதார துறையில் ஒவ்வொரு மாவட்ட மருத்துவ மனைகளையும், மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது. இது வணிக மையமாகிவிட்ட இன்றைய மருத்துவ துறையில், மருத்துவர்களின் பற்றாக் குறையை போக்கி சேவை மனப்பான்மையை வளர்த்தெடுக்கும். மத்திய அரசின் மருந்தகங்களில் 2000க்கும் அதிகமான மலிவு விலை ஜெனிரிக் மருந்து வகைகளை கொண்டு வருதல். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் குடும்பத்துக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு இவைகளை எல்லாம் சொல்லலாம்.
வேளாண் துறையில் இது வரை இருந்திடாத வகையில் 15லட்சம் கோடி வரை வங்கி கடன் வழங்கும் திட்டம், விவசாய விளை பொருட்களை உள்ளூர் சுய உதவி குழுக்கள் மூலமே சேமித்து வைக்கும் திட்டம், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல தனி சரக்கு ரயில் திட்டம் என்று, நீடித்த வளர்ச்சிக்கான திட்டங்களே இங்கு கொட்டி கிடக்கின்றன.
வறட்சி காலங்களில் காலிக் குட போராட்டங்களை, ரயில், பஸ்ஸில் தண்ணீர் கொண்டுவந்த அவலங்களை, எல்லாம் முக்கிய செய்திகளாக்கிய செய்தி ஊடகங்கள், இன்று 3.2 லட்சம் கோடி செலவில் 14 கோடி வீடுகளுக்கே , சுத்தமான குடிநீரை குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கும் திட்டத்தை கண்டு கொள்ளாதது ஏனோ?. ஒருவேளை இலவச மோடி குடிநீர் பாட்டில்களில், தினமும் வீடு தேடி வரும் என்றிருந்தால் கொண்டாடி இருப்பார்களோ என்னவோ?.
நன்றி தமிழ் தாமரை வெங்கடேஷ்
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |