நாட்டின் வரி விதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கியநிலையில், அதனை மாற்றிக்காட்டியது மத்திய பாஜக அரசுதான்; வரி விதிப்புக்கு உள்பட்ட அனைவரும், நாட்டின் வளா்ச்சிக்காக வரிசெலுத்த முன்வர வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக, தனியாா் ஆங்கில செய்தி தொலைக் காட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அவா் பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம்கோடியாக (5 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள்) உயா்த்த வேண்டுமென்ற இலக்கை எட்டுவது எளிதான விஷயமல்ல. அதேசமயம், அது எட்டக்கூடிய இலக்குதான். நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்பு சுமாா் ரூ.213 லட்சம் கோடியை (3 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள்) எட்டுவதற்கு 70 ஆண்டுகள் ஆகியுள்ளது.
மிகப் பெரிய இலக்கை நிா்ணயித்து, அதற்காக கடினமாக உழைப்பது மிகச்சிறந்த விஷயமாகும்.
கடந்த 8 மாதங்களில், வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு முடிவுகளை மத்தியஅரசு மேற்கொண்டுள்ளது. தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகள் ஒழுங்கு முறைபடுத்தப்பட்டன; அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டது. முத்தலாக் நடைமுறை தடைசெய்யப்பட்டது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் திருத்தப்பட்டது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில், சிறியநகரங்களின் வளா்ச்சியில் மத்திய பாஜக அரசு கவனம்செலுத்தி வருகிறது.
இந்தியாபோன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு பல்வேறு சவால்களும் உள்ளன. நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீா்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கின. ஆனால், வரிவிதிப்பு முறையை மக்களை மையப்படுத்தியதாக மாற்றியது பாஜக அரசு தான்.
கடந்த ஆண்டு 1.5 கோடி கார்கள் விற்கபட்டது, 3 கோடிக்கும் அதிகமானோர் வணிகத்திற்காக அல்லது ஓய்வுக்காக வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். நாடுமுழுவதும் வக்கீல்கள், மருத்துவர்கள் மற்றும் ஆடிட்டர்கள் என பலதொழில் வல்லுநர்கள் உள்ளனர், ஆனால் 2,200 தொழில் வல்லுநர்கள் மட்டுமே ஆண்டு வருமானத்தை ரூ .1 கோடிக்குமேல் உள்ளதாக அறிவித்தனர். எனவே பலர் விரைவில் “உச்ச நீதிமன்றத்தை சந்திப்பார்கள்”. மக்கள் விடுமுறைக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதையும், அவர்கள் விரும்பும் கார்களை வாங்குவதையும் பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் வரிசெலுத்தும் எண்ணம் இல்லாததை காணும் போது, அது எனக்கு கவலை அளிக்கிறது.
“இனி மோசமான விளையாட்டிற்கு இடமில்லை” . “வரிதுன்புறுத்தல் என்பது கடந்த காலத்தின் ஒருவிஷயமாக இருக்கும், இப்போது இந்தியா தொழில்நுட்ப உதவியுடன் வரி ஊக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வரிநிர்வாகம் மாற்றியமைக்க பட்டுள்ளது. வரி செலுத்துவோர்களை அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளின் கிளப்பில் இந்தியா நுழைந்துள்ளது.
இவை எல்லாம் வெறும் சாம்பிள்தான். இனிமேல்தான் உண்மையான ஆக்ஷனே ஆரம்பிக்க போகிறது. இதுபோன்ற எண்ணற்ற முடிவுகளை இடைவிடாமல் என்னால் எடுக்கமுடியும்.அவைகள் வெறும் சதமாக இருக்காது, இரட்டை சதமாக இருக்கும். உங்கள் உச்சி மாநாட்டின் கருப்பொருள் இந்தியா செயல்திட்டம் 2020 ஆகும், ஆனால் இந்தியா இப்போது முழு 10 ஆண்டுகளுக்குமான செயல் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது. ஆம், டி -20 பாணி வடிவமைபுடன் செயல் திட்டங்கள் இருக்கும், ஆனால் நிலையான செயல்திறனை உறுதிசெய்தல், புதிய பதிவுகளை உருவாக்குதல் மற்றும் தயாரிப்பது என இது இந்தியாவின் தொடராக இருக்கும். உலகின் மிக இளைய நாடு மிகவேகமாக விளையாடும் மனநிலையில் உள்ளது” இவ்வாறு கூறினார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |