உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாசல பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
நமது நாட்டின் அங்கமான அருணாசல பிரதேசத்தை தாம் ஆக்கிரமித்திருக்கும் தென்திபெத்தின் ஒருபகுதி என கூறி வருகிறது சீனா. இதனை இந்தியா எப்போதும் நிராகரித்து வந்துள்ளது.
தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அருணாசலப்பிரதேச மாநிலம் உருவான 34-வது ஆண்டு நிகழ்ச்சியில் அமித்ஷா இன்று பங்கேற்றார்.
மேலும் தொழிற்சாலைகள், சாலைதிட்டங்கள் ஆகியவற்றையும் அமித் ஷா அங்கு தொடங்கி வைத்தார். இதற்கு தான் ஆட்சேபம் தெரிவிப்பதாக வழக்கம்போல கூறியிருக்கிறது சீனா.
இந்தியாவும் சீனாவும் எல்லைபிரச்சனை தொடர்பாக இது வரை 22 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |