மூன்றாண்டு காலத்துக்கு செயல்படும்வகையில், 22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
சட்ட ஆணையத்தில் மத்தியஅரசு முன்வைக்கும் விவகாரங்களைத் தவிர, சட்டம் குறித்த ஆய்வு மேற்கொள்ளும். மேலும் பல்வேறு சீர்திருத்தங்களைப் பற்றிய யோசனைகள் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படும். புதிதாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டங்கள் குறித்தும் இந்த ஆணையம் ஆய்வுசெய்யும். நீதி வழங்குவதற்கான வழி முறைகளில் நிலவும் தாமதத்தை களைவது, வழக்குகளை விரைந்து முடிப்பது, வழக்கிற்கான செலவை குறைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேவையான ஆய்வு, ஆராய்ச்சி ஆகியவற்றை ஆணையம் மேற்கொள்ளும். மேலும், பயனில்லாத அல்லது பொருத்தமற்ற, உடனடியாக நீக்கப்படவேண்டிய சட்டங்களை அடையாளம் காண்பதுடன், அவசியமான சட்டங்களைப் பரிந்துரைப்பது, ஏழைகளுக்கு சேவைசெய்யும் வகையில் சட்டரீதியான செயல்பாட்டை உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படும்.
மேலும், உரிய அதிகாரம்பெற்ற “தொழில்நுட்பக் குழு’ ஒன்றை அமைக்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கபட்டுள்ளது. இதன்படி மத்திய அரசிற்கான முதன்மை அறிவியல் ஆலோசகரை தலை வராகக் கொண்ட 12 உறுப்பினர்கள் கொண்ட “தொழில் நுட்பக் குழு’ ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் தேசிய அளவிலான பரிசோதனை மையங்களிலும் அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் உருவாக்கபடும் தொழில்நுட்பங்களை அடையாளம்கண்டு, அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் குறித்த கொள்கை ரீதியான ஆலோசனைகளை இக்குழு வழங்கும் என்றார் அவர்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |