இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனதுமனைவி மெலினாவுடன் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்.
சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் டிரம்ப் மற்றம் மெலனியாவிற்கு கதர்துண்டு அணிவித்து வரவேற்றனர். பிறகு மகாத்மாகாந்தி குறித்தும், சபர்மதி ஆசிரமத்தின் சிறப்புகுறித்தும் பிரதமர் மோடி, டிரம்ப் மற்றும் மெலனியாவிற்கு எடுத்துரைத்தார். அங்கிருந்த மகாத்மா காந்தியில் படத்திற்கு டிரம்ப், நூலால் செய்யபட்ட மாலையை அணிவித்தார். பிறகு டிரம்ப் மற்றும் மெலனியா ராட்டையில் நூல்நூற்றனர். ராட்டையில் நூல் நூற்பது குறித்து ஆசிரம நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து ஆசிரமத்தில் வைக்கப் பட்டுள்ள விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப் தனது வருகையை பதிவுசெய்தார். பிறகு ஆசிரமத்தில் வைக்கப் பட்டிருந்த 3 குரங்குகளின் தத்துவம்குறித்து பிரதமர் மோடி, டிரம்ப்பிற்கு விளக்கினார்.
டிரம்ப்பின் வருகை குறித்து ஆசிரம நிர்வாகியான கார்த்திகேய சாரா பாய் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஆசிரமத்திற்கு வருகைதந்தது குறித்து அமெரிக்க அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார். இங்கிருந்து புறப்படும்போது, மிகவும் அமைதியாக உணர்ந்ததாக தெரிவித்தார். மேலும் மகாத்மா காந்தியின் எளியவாழ்க்கை முறையை அவர் புகழ்ந்துரைத்தார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, ராட்டைசக்கரம், மார்பிள் கற்களால் ஆன 3 குரங்குகளின் சிலை உள்ளிட்டவை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன என்றார்.
சபர்மதி ஆசிரமத்தில் ராட்டைசுற்றுவது மற்றும் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் குறித்து டிரம்ப்பின் மனைவி மெலானியா மிகவும் ஆர்வமாக கேட்டறிந்தார். காந்தியின் புகழ்பெற்ற பாடலான “ரகுபதிராகவ ராஜா ராம்” என்ற பாடல் பின்னணியில் இசைக்கப் பட்டதை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மிகவும் ரசித்தனர்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |