மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான்

மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் அமையும் என்பதால் மாநில முதல்வராக இருக்கும் மமதாபானர்ஜி கவனமாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித்ஷா கலந்துகொண்டார். அமித்ஷாவின் கொல்கத்தா வருகைக்கு எதிராக பல்வேறுகட்சிகள், இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தின.

கொல்கத்தாவில் சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:

மமதா பானர்ஜி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி, குடியுரிமைசட்ட திருத்தத்தைக் கொண்டு வந்த போது மமதா பானர்ஜி எதிர்க்கிறார்.

குடியுரிமை சட்ட திருத்தத்தை காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்து எதிர்க்கின்றன. மேற்குவங்கத்தில் ரயில் நிலையங்கள் எரிக்கப்பட்டன. அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நாங்கள் முயற்சிக்கும்போது ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்?

மமதாவின் ஆட்சிக் காலத்தில் மேற்குவங்கத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன. மமதாவின் ஆட்சிக்காலத்தில் மேற்கு வங்கத்தை சொர்க்கபூமியாக மாற்ற முடியாது. சிறுபான்மையினரின் குடியுரிமையை பறிப்பதற்காக குடியுரிமைசட்ட திருத்தம் கொண்டுவரப்பட வில்லை. ஒவ்வொருவருக்கும் குடியுரிமை வழங்குவதற்குதான் மத்தியஅரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதை மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியால் தடுத்துவிடமுடியாது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கவேண்டாமா? நீங்களே பதில் சொல்லுங்கள்.. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து தடைகளையும் பிரதமர் மோடி அகற்றிவிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...