மோடி பிரதமராக பதவியேற்றது முதல் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்.
பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன்பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலிருந்து விலகலாமா என யோசித்து வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் இருந்து வெளியேறலாமா என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த டுவிட்டர்பதிவுக்கு பலரும் “நோசார்” (#NoSir) என்று பதிவிட்டு வருகின்றனர். தற்போது #NoSir என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |