கரோனா வைரஸ் இந்திய மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

கரோனா வைரஸ்தொற்று குறித்து இந்திய மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலி சென்றுதிரும்பிய தில்லி நபருக்கும், துபாய்சென்று திரும்பிய தெலங்கானாவைச் சேர்ந்தவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த நிலையில் தில்லி நபரின் குடும்பத்தினருக்கும் கரோனா அறிகுறி இருப்பதால் அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது, சில சின்னச்சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கைகளை அடிக்கடி கழுவுங்கள், கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு, வாயைத்தொட வேண்டாம், வெளியிடங்களில் கவனமாக இருங்கள் என்று போஸ்டரையும் இணைத்துள்ளார்.

மேலும், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துகொள்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கபட்டுள்ளது. இந்தியாவுக்கு வரும் மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது முதல் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்வதுவரை பல்வேறு துறை அமைச்சகங்கள், மாநிலங்கள் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றன என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...