குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது

‘குடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடைய குடியுரிமையையும் பறிக்காது; இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும்’ என மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்ய சபாவில் தெரிவித்தார்

டில்லியில் ஏற்பட்ட கலவரம் குறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது அமித் ஷா பதில் அளித்து பேசினார். அவர் மேலும் பேசியது,’ டில்லி கலவரத்தின் போது பாதிக்கபட்டவர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். கலவரத்திற்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிக்கமுடியாது. மத வித்தியாச மின்றி கலவரம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின்முன்பு அனைவரும் கொண்டு வரப் படுவார்கள்.

கலவரகாரர்கள் இந்தியன் பினல்கோட் மற்றும் இந்தியன் கிரிமினல் கோடுக்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும். கலவரக்காரர்களின் அனைத்து விவரங்களையும் நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம். ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை கலவரக் காரர்களை அடையாள காண பயன்படுத்த படுகிறது.

ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து வருகிறோம். இதுவரை 700க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரக்காரர்களை அடையாளம் காண்பிப்பதில் மக்கள் எங்களுக்கு உதவுகின்றனர். இவ்விஷயத்தை கையாள்வதில் அரசு முன் மாதிரியாக இருக்கும்.

முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒன்றை நான் கூறி கொள்கிறேன். சிஏஏ குறித்து தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. இச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கஅல்ல; குடியுரிமை வழங்குவதற்காகத்தான். தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்.பி.ஆர்.,) எந்த ஆவணங்களும் தேவையில்லை. விருப்பமிருந்தால் மட்டுமே தகவல்களை அளிக்கலாம். என்பிஆர்., குறித்து யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. அதில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...