தேர்தலில் வெற்றிபெற்று பாஜக எம்எல்ஏக்கள் வரும் சட்டப்பேரவையில் இடம்பெறுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகபாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகன் இன்று சென்னை வந்தார். அவருக்கு மிகவும் பிரமாண்டமான வரவேற்பு பாஜக தொண்டர்களால் வழங்கப்பட்டது. பின்னர் சென்னை தி.நகரில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியதாவது:
பாஜக மூத்த தலைவர்களின் ஆதரவோடு வழிகாட்டு தலோடு இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன்.
வரும்தேர்தலில் வெற்றிபெற்று பாஜக எம்எல்ஏக்கள் சட்டப் பேரவையில் இடம் பெறுவார்கள். அதை நோக்கியதாகவே எனதுபயணம் இருக்கும்.
மக்களிடத்தில் பாஜகவின் கொள்கைகளை கொண்டுசெல்வோம்; தமிழக நலன், தமிழர்கள் நலனை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் .
பாஜகவில் தற்போது இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் அதிகளவில் இணைந்து வருகிறார்கள். அவர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன்.
சிஏஏ உள்ளிட்ட மத்தியஅரசின் திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் தவறான பிரசாரங்களுக்கு பதிலாக, வரும் 20-ஆம் தேதி முதல் அடுத்தமாதம் 5-ஆம் தேதி வரை “உண்மையைச் சொல்வோம்; உரக்கச் சொல்வோம்’ என்னும் பரப்புரை பயணத்தை எல்லா கிராமங்களிலும் மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |