உத்தரப் பிரதேச அரசின் மீதான மாநிலமக்களின் அபிப்ராயத்தை பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளில் மாற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவினால் நம்பிக்கை, நல்லநிர்வாகம் ஆகியவற்றுடன் வளர்ச்சி பாதையில் மாநிலத்தை பாஜக அரசு அழைத்துச்செல்கிறது.
மத்திய அரசின் திட்டங்களான பிரதமர் வீடுகட்டும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம், மானிய விலையில் எரிவாயு இணைப்பு திட்டம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தியதில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
சுமார் 24.56 கோடி பேர் கலந்து கொண்ட கும்பமேளா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். அந்தநிகழ்ச்சி உலகிலேயே தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கான உதாரணமாக உள்ளது. நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில், முந்தைய ஆட்சிகளின் போது சட்டம்}ஒழுங்கு மோசமான நிலையில் இருந்தது.
ஆனால், பாஜக ஆட்சியில் மாநிலத்தில் சட்டம்}ஒழுங்குமேம்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் எந்தவொரு கலவரமும் ஏற்பட்டதில்லை. குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது.
இதற்கு முன்னர் குறிப்பிட்ட சிலதுறைகளில் மிகவும் பின்தங்கியிருந்த நமது மாநிலம், தற்போது பாஜக அரசின் முயற்சியால் அந்தத்துறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பெண்களைப் பின் தொடர்ந்து தொல்லை கொடுப்போரை கண்காணிக்க தனிரோந்துப் படை அமைக்கப்பட்டுள்ளது.
பூர்வாஞ்சல் விரைவுச் சாலை கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தசாலை மக்கள் பயன் பாட்டுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புந்தேல்கண்ட் விரைவுச் சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக அந்தப்பணிகள் நிறைவடையும்.
மீரட்-அலாகாபாத் இடையேயான கங்கை விரைவுச் சாலை பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த மூன்று விரைவுச் சாலைகளும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்க இருக்கின்றன. மாநிலத்தில் புதிதாக 12 விமான நிலையங்களை அமைப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
ஜெவார் சர்வதேச விமான நிலையமானது அதிகளவிலான வேலை வாய்ப்புகளையும், சர்வதேச அளவில் உத்தரப் பிரதேசத்துக்கென தனி அங்கீகாரத்தையும் அளிக்கும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |