ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சிமூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஃபக்கீா் முகமதுகான் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தாா்.
வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத் தாக்கைச் சோ்ந்த மக்கள், பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கைகள் மீது பெரும்நம்பிக்கை கொண்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
ஜம்முவில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்தியப்பிரதேச பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா். அவருடன், ஊராட்சித் தலைவா் சஞ்சாா்சிங், இளைஞரணித் தலைவா் சன்னி சா்மா, உமேஷ்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்களும் பாஜகவில் இணைந்தனா்.
பின்னா் ஃபக்கீா் முகமதுகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குரேஸ்பகுதி மக்கள் மோடியின் கொள்கைகள் குறித்து மிகுந்தநம்பிக்கை கொண்டுள்ளனா். குரேஸ் பகுதியில் இதுவரையிலும் போதிய அடிப்படைவசதிகள் செய்து தரப்படவில்லை. இந்தப்பகுதி மக்களின் பிரச்னைகள் அனைத்தும் பாஜக அரசால் தீா்க்கப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் குரேஸ் தொகுதியில் பாஜக பெரும்வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றாா்.
முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி தலைமை யிலான பிடிபி கட்சியில் இணைவதற்குமுன்பு கடந்த 1996-இல் பந்திப்போரா மாவட்டம், குரேஸ்தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கபட்டாா் ஃபக்கீா் முகமதுகான். இவா் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |