உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும்

‘கரோனா நோய்த் தொற்றால் நாட்டில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அந்த நோய்த் தொற்று தொடா்பான பரிசோதனை; நோய்த்தொற்று உள்ளவா்களை கண்டறிவது; தனிமை படுத்துவது; நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்க படுபவா்களை வீடுகளை விட்டு வெளியேறாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று மாநில முதல்வா்களை பிரதமா் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டாா்.

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் பிரதமா் மோடி, மாநில முதல்வா்களுடன் காணொலி முறையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் கூறியதாவது:

அடுத்த சிலவாரத்துக்கு கரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படாமல் கட்டுப்படுத்துவதே நமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். இதற்காக கரோனா பரிசோதனை, நோய்த்தொற்று உள்ளவா்களை கண்டறிவது, அவா்களை தனிமைப் படுத்துவது, நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப் படுபவா்களை வீடுகளை விட்டு வெளியேறாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கின் போது கரோனாவை முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்போது நாம் போா்க்கால சூழலில் பணியாற்றி வருகிறோம். மாநிலங்களில் எந்த இடத்தில் கரோனா அதிகம் பரவுகிறது, எந்தஇடம் கரோனாவின் மையமாக உள்ளது என்பதை அடையாளம் கண்டு அதைமேலும் பரவாமல் தடுக்கவேண்டும். ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களிடம் இருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கவேண்டும் என்பதே இப்போது நாட்டின் லட்சியமாக உள்ளது. அதற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

சா்வதேசளவில் கரோனாவால் அதிகபாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் அடுத்த கட்டமாக மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் மக்களுக்கு தேவையான அடிப்படை உணவுப்பொருள்கள், மருந்துப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மருத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான மூலதனப் பொருள்களும் தடையின்றி கிடைக்க வேண்டும். கரோனா பாதிப்புள்ளவா்களுக்காக சிறப்பு மருத்துவ மனைகளை ஒதுக்க வேண்டும். நாடுமுழுவதும் சட்டம்-ஒழுங்குபிரச்னை எழாமலும் இருக்க வேண்டும்.

நாடு சோதனையான காலகட்டத்தை தாண்டி வரும் இந்த நேரத்தில் தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளுடன் அனைத்து நிலைகளிலும் இணைந்து பணியாற்ற வேண்டும். தேவைக்கு ஏற்ப மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆயுஷ் மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், என்சிசி, என்எஸ்எஸ் அமைப்பினா் என அனைவரையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைக்கு அனைத்து மாநிலங்களும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்துவருகின்றன. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் சிறப்பானது. அறுவடைக் காலத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் இருந்து சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றாா்.

பிரதமரிடம் பேசிய பல்வேறு மாநில முதல்வா்கள், தங்கள் மாநிலத்தில் உள்ள நிலவரத்தை விளக்கினா். மேலும், இந்த இக்கட்டானநேரத்தில் அவரது ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் தலைமைக்கு நன்றிதெரிவிப்பதாக முதல்வா்கள் கூறினா்.

பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித்ஷா உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனா். அப்போது, மத்திய அரசு கூறியுள்ள விதிகளின்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப் படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...