இந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம உண்டு

இந்தியாவில் போதுமான அளவில் டெஸ்ட்கள் செய்யப்படவில்லை..அதனால்தான் சீன வைரஸ் தொற்று குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது என ஒரு கும்பல் கதறிக்கொண்டே இருந்தது..

அதாவது நிறையப்பேருக்கு சோதனை செய்தால் , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயரும் என்று சொன்னார்கள்..ஆகா..மக்கள் நலனில்தான் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை என்று தோன்றும்… அதெல்லாம் ஒன்றுமில்லை.. பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகமானால் , அதை வைத்து மத்திய , மாநில அரசுகளை குறை சொல்லி பிழைப்பை ஓட்டலாம் என்று அந்த நரிக்கும்பல் காத்துக் கிடந்தது …

லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின் 14 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டோம்.. சீன வைரசின் இன்குபேஷன் பீரியட் அதிகபட்சம் 14 நாட்கள் தான் ..

அதாவது ஒருவர் அதிகபட்ச நோய் எதிர்ப்புசக்தி உடையவராக இருந்தாலும் , அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் , அதிகபட்சம் 14 நாட்களுக்கு மேல் அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட்டே தீரும் …இருமல் , காய்ச்சல் , பின் மூச்சுத்திணறல் போன்றவை வரும்… முறையான மருத்துவம் கிடைக்காவிட்டால் அதிகபட்சம் 10 நாட்களுக்குள் , ஆள் காலி …

ஒருவேளை இந்த கூமுட்டைகளெல்லாம் சொல்வது போல எக்கச்சக்கமான மக்களுக்கு நோய்த்தொற்று இருந்திருந்தாலும் இந்த 14 நாட்களில் அனைத்துமே வெளிவந்திருக்கும் …யாரும் மறைக்க முடியாது …

டெல்லியில் நடைபெற்ற தனிநபர் மாநாடு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் , நோய்தொற்று மிகக் கணிசமான அளவில் குறைந்திருக்கும் என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.. டெஸ்ட் செய்தால் எண்ணிக்கை உயரும் என்றும் ஊளையிட்டுக் கொண்டிருந்த கும்பல் இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை…

இந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம சக்தி உண்டு ..அது எப்போதுமே இந்த தேசத்தைக் காத்து வருகிறது ..மொகலாயர்கள் ஆதிக்கத்தில் சிக்கித் திணறிய இந்த நாட்டை மீட்க ஒரு வீர சிவாஜியையும் விஜயநகர சாம்ராஜ்யத்தையும் கொடுத்தது…

பின்னர் வெள்ளையன் அடிமைத்தனத்திலிருந்து விடுபட முதலில் பாலகங்காதர திலகரையும் , பின்னர் மகாத்மா காந்தியையும் இந்த தேசம் வழங்கியது. சுதந்திரத்துக்குப்பின் நேருவின் சொதப்பல்களைத் தவிர்க்க ஒரு வல்லப் பாய் பட்டேல் கிடைத்தார்…

இப்போதும் அப்படித்தான் ….மிக நெருக்கடியான கால கட்டத்தை இந்த நாடு கடக்கும் நேரத்தில் தேசத்தின் பிரதமராக திரு . நரேந்திர மோடி இருக்கிறார்… அவரும் இந்தப் பேரிடரை மிகச் சிறப்பாக கையாள்கிறார்…

மிக விரைவில் இந்த தேசம் நெருக்கடியிலிருந்து மீண்டு வரும்…

ஊளையிடுவோர் ஓரமாகப் போய்விடுங்கள்..

ஜெய்ஹிந்த் !

நன்றி சரவண குமார் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...