வரும் 2012 ஆம் ஆண்டில் உலகப்பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டு வருவதும், வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நிலை வலுப்பெற்று வருவதும் உலகப்பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த பணக்கொள்கைகளில் கடுமை காட்டி வந்த சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை எட்டும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டில் ஐரோப்பிய நிலவரங்கள் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், சீனாவின் வளர்ச்சி உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை நிலை நிறுத்தும் என ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பேங்கின் தலைமை பொருளாதார நிபுணரான ஜெரார்ட் லியான்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கிய நாடுகளில் நடைபெறவுள்ள தேர்தல்கள், அதன் காரணமான ஆட்சி மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் போன்றவை உலகப்பொருளாதார வளர்ச்சியை பாதிப்படையச்செய்யும் அம்சங்களாக உள்ளன.
இருப்பினும், கடந்த காலண்டைவிட தற்போதைய காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் காட்டி வரும் சிறப்பான வளர்ச்சி நம்பிக்கை தருவதாக உள்ளது. 2012-ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் 2.2 சதவீத வளர்ச்சியை எட்டுமென உலகப்பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.