ஊரடங்கு தளர்வு வழிமுறைகள்

ஊரடங்கு மே 3ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை மற்றும் 20 ம் தேதிக்கு பின்னர் சிலதளர்வுகளுக்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுபரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது மேற்கொள்ளப்படும் வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்விவரம் வருமாறு:

* பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொதுபோக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
* மே 3 வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக் கூட்டங்களுக்கு தடைதொடரும்.
* அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது.
* இறுதிச் சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.
* மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.
* மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.
* தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும்.
* மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக் கிடையேயான போக்கு வரத்துக்கு தடை. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப் படும்.
* தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி.
* தனிமைப்படுத்த பட்ட பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்.

ஏப்.,20 முதல்

* ஏப்.,20ம் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளுக்கு அனுமதி.
* சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற் சாலைகளுக்கு அனுமதி.
* சிறு, குறுதொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். மாஸ்க் அணிந்து தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் பணியாற்ற அனுமதி.
* ஊரகவேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்.
* மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.
* விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.
* சிறு குறு தொழிலில் ஈடுபடுவோர் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்.
* தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து சமூகஇடைவெளி விட்டு பணியாற்ற வேண்டும்.
* ஐடி நிறுவனங்கள் அதனை சார்ந்த நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன்
*சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்.,20 முதல் இயங்கலாம். ஆனால், சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
* கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது.
* மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம்
* அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்
* ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், மருந்து பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்யாவசிய தேவைகளுக்கான விமான சேவைக்கு அனுமதி
* ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கிய பயணிகளுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.
* மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில்நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
*பொதுஇடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.
*ஊரக பகுதிகளுக்கு தொழில் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்
*ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்படலாம். அத்யாவசிய பொருட்கள் செயல்படலாம்.
*கொரியர் நிறுவனங்கள், கேபிள், டிடிஎச் சேவைகள் இயங்கலாம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...