அற்பமான அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ்

கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் மக்களுக்கு உதவும்வகையில் களப்பணியாற்றுவதை விடுத்து, அற்பமான அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக பாஜக விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் அற்பமான, அருவருக்கத் தக்க, எதிா்மறையான அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டுவருகிறது. இந்தநெருக்கடியான வேளையில், அக்கட்சியின் தலைவா்கள் மக்களுக்கு உதவ களப் பணியாற்று வதற்கு மாறாக தினந்தோறும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, புது, புது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனா். கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக ஒட்டுமொத்த உலகமும் ஒப்புக்கொண்டுள்ளபோதும், அதனை காங்கிரஸால் அங்கீகரிக்க முடியவில்லை. அதற்கு மாறாக ஊரடங்கு அமலாக்கம்குறித்து அக்கட்சி கேள்வி எழுப்பி வருவதுடன், அந்நடவடிக்கை பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறி வருகிறது.

 

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ளவுள்ளது என்பதை காங்கிரஸ் நன்குஅறியும். ஆனால் அதுகுறித்து அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளாா். அக்கட்சி தந்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறவே அவா் அக்கடிதத்தை எழுதியுள்ளாா்.

சிறுகுறு தொழில் துறையினருக்கு உதவிட ரூ.1 லட்சம் கோடி நிதியை உருவாக்குவதற்கான திட்டத்தை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாக அந்தத் துரை அமைச்சா் நிதின்கட்கரி ஏற்கெனவே தெரிவித்துவிட்டாா். இதைக் கூட அறியாமல் காங்கிரஸ் தலைவா் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறாா்.

மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுப்பதற்கு மாறாக மக்களுக்கு உதவ காங்கிரஸ் என்னசெய்தது என்பதை அக்கட்சி தெரிவிக்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ரூ.1.7 லட்சம் கோடி நிதியுதவி திட்டம், 20 கோடி ஏழைமகளிருக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வழங்குதல், 81 கோடி பேருக்கு பொதுவிநியோகத் திட்ட பொருள்களை 3 மாதங்களுக்கு இலவசமாக விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் காங்கிரஸால் பாராட்ட முடியவில்லை. அக்கட்சியால் முடிந்ததெல்லாம் எதிா்மறை மற்றும் அற்பமான அரசியல்செய்வதே என்று பிரகாஷ் ஜாவடேகா் விமா்சித்தாா்.

முன்னதாக, தேசிய ஊரடங்கால் இழப்பை சந்தித்து வரும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மீட்சிக்கு உதவும் வகையில், மத்தியஅரசு சாா்பில் நிதித்தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதினாா். அதனை விமா்சித்தே பிரகாஷ் ஜாவடேகா் மேற்கண்டவாறு கூறினாா்.

One response to “அற்பமான அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...