பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஒருஆண்டில் செய்த சாதனைகளை சமூக வலைதளத்தில் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது.
கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தே.ஜ. கூட்டணி இரண்டாவது முறையாக அபாரவெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.கடந்தாண்டு மே 30ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சியமைத்ததது. இந்நிலையில் கடந்த மாதமே ஒவ்வொரு அமைச்சகத்திலும் கடந்த ஒருஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட சாதனைகள் முக்கிய நடவடிக்கைகள் குறித்த விரிவான பட்டியலை தாக்கல்செய்யும் மத்திய அமைச்சக செயலகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதன்படி அனைத்து அமைச்சகங்களும் இதுகுறித்த பட்டியலை தாக்கல் செய்துள்ளன. தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையால் நாடுமுழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி சாதனைகளை அறிவிப்பது சரியாக இருக்காது என மத்திய அமைச்சக வட்டாரங்கள் கருதுகின்றன.எனவே வரும் 30ல் மோடி அரசின் சாதனைகள் பற்றியபட்டியல் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியிடப்படும் என தெரிகிறது.
மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற அடுத்தசில நாட்களிலேயே ‘இன்னும் ஐந்து ஆண்டுகளில் நம்நாடு 350 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளாதார நாடாக மாறும். அதற்கு அனைத்து அமைச்சகங்களும் இப்போதே கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்’ என்றார்.எனவே இதற்கான செயல் திட்டங்களை அனைத்து அமைச்சகங்களும் தயாரித்துள்ளன.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |