ஒருசிவலிங்கம், சில உடைந்த சிலைகள் மற்றும் பிற கலைப் பொருட்கள் அயோத்தியில் ராமர்கோயில் கட்டுமான இடத்தில் கண்டெடுக்க பட்டுள்ளதாக அயோத்தி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ராமர் கோயிலுக்காக அயோத்தியில் மிகப்பெரிய எந்திரங்களுடன் நிலத்தைச் சமப்படுத்தும் கட்டுமானப் பணிகள் மே 11ம் தேதி தொடங்கியுள்ளன. அப்போது 5 அடி சிவலிங்கம், 7 கருப்புத் தூண்கள், 6 செம்மணற்கல் தூண்கள், மற்றும் தெய்வங்கள், பெண் தெய்வங்களின் உடைந்த சிலைகள் ஆகியவை கண்டெடுக்க பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அறக்கட்டளை கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச அரசின் பொதுப்பணி துறை, மின்சாரக் கார்ப்பரேஷன், ஆகியவை ஒருதனியார் நிறுவனத்துடன் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளது
மாவட்ட அதிகாரிகளிடம் பெற்ற முறையான அனுமதியுடன் பணிகள் தொடங்கியுள்ளன, லாக்டவுன் முடிந்த பிறகு வேலைகள் வேகம்பிடிக்கும் என்று தெரிகிறது , அறக்கட்டளை தன் உறுப்பினர்களுடன் லாக்டவுன் முடிந்தவுடன் பேச்சுநடத்த கூட்டம் கூட்டும்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |