இந்தியாவின் பெருமை மற்றும்  சுயமரியாதையில் சமரசம் இல்லை

இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரத்தை பொருத்த வரை இந்தியாவின் பெருமை பாதிக்க படாமல் இருப்பதை நரேந்திரமோடி தலைமையிலான அரசு உறுதிசெய்யும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது மேலும் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது, ஆனால் இந்தியா,  சீனா, பாகிஸ்தான் என்ற எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப்பகுதியான பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன படையினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து இருநாட்டு உள்ளூர் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதற்றம் தணிந்தது, அதேபோல்  மே 9-ஆம் தேதி சிக்கிம் எல்லையான நகுலா பாஸ் பகுதியில் இருநாட்டு படைவீரர்களும் மோதிக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மே 22-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் அத்து மீறி நுழைந்து விட்டதாககூறி  சீனா அங்கு ஏராளமான படைகளை குவிக்க தொடங்கியது, இந்தியாவும் பதிலுக்கு படைகளைக் குவித்து வந்த நிலையில் இரு நாட்டுக்கும் இடையே போர்பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 27-ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும்  இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம்செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப் கூறினார்.

ஆனால் இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளும் அமெரிக்க அதிபரின் அறிவிப்பை  புறக்கணித்ததைத் தொடர்ந்து இருநாடுகளும் எல்லை பிரச்சனையை பேசிதீர்க்க முன் வந்தன, இந்நிலையில்  கிட்டத்தட்ட 12 சுற்று பேச்சு வார்த்தைகள்  நடைபெற்றன, ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை, இந்நிலையில் 14 கார்ப்பஸ் கமாண்டர் அளவிலான இந்தோ-சீன பேச்சு வார்த்தை சனிக்கிழமை  சீன எல்லைப் பகுதியில் உள்ள  மோல்டோவில் நடைபெற்றது. 14 கார்ப்பஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்  ஹரிந்தர்சிங், சீனாவின் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் தலைவர் மேஜர்ஜெனரல் லியு லினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது, இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாஜகவின் மகாராஷ்டிர ஜன சம்வத்  பேரணியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்,

அப்போது பேசியவர்,   இந்திய-சீன  எல்லை பிரச்சனையை பொருத்த வரையில், இந்தியாவின் பெருமையை நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி செய்யும்.  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நடந்து வருகிறது, அதை விரைவில் தீர்க்க விரும்புகிறோம், சீனாவுடனான பேச்சு வார்த்தைகள் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஜூன்-6 பேச்சு வார்த்தைகள் மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. மொத்தத்தில்  நாட்டின் தலைமை வலுவான கைகளில் உள்ளது என்பதை மக்களுக்கு உறுதிபடுத்த விரும்புகிறேன். இந்தியாவின் பெருமை மற்றும்  சுயமரியாதை விவகாரத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தின் விளக்கத்தை கோரியுள்ளனர், அவர்களுக்கு நான்ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,  நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் நான் என்ன கூறினாலும் அதை பாராளுமன்றத்தில் கூறுவேன் என்றும், எப்போதும் மக்களை தவறாகவழிநடத்த மாட்டேன் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...