லடாக்கில் உள்ள இந்திய எல்லைப்பகுதியை சீன ராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கிறார்களா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் எம்பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியதையடுத்து லடாக் பாஜக எம்பி, ராகுல் காந்திக்குப் பதிலடிகொடுதுள்ளார்.
லடாக் பாஜக எம்.பி.ஜம்யாங் செரிங் நம்க்யால் என்பவர் மிகவும்கிண்டல் தொனியுடன் ராகுல்க்கு பதிலடி கொடுத்துள்ளார், அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் ஆட்சியின் போது சீனா ஆக்ரமித்ததாக சிலபகுதிகளைச் சுட்டி காட்டியுள்ளார் லடாக் பாஜக எம்.பி.
அக்சை சின் (37,244 சதுர கிமீ) 1962-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது தியாபங்க் நாக் மற்றும் சப்ஜி பள்ளத்தாக்கு- 2008
தேம்ஜோக்கில் உள்ள ஜொராவர் கோட்டையை சீன ராணுவத்தினர் சேதம்செய்தனர், இது 2008-ல். 2012-ல் இதே இடத்தில் பிஎல்ஏ ராணுவம் அங்கு கண்காணிப்பு மையத்தையும் அமைத்தது. இதோடு 13 சிமெண்ட் வீடுகளையும் இந்திய பகுதியில் கட்டியது.
இந்தியா தூம்செலியை 2008-09 யுபிஏ ஆட்சியில் சீனாவிடம் இழந்தது. இவ்வாறு காங்கிரஸ் ஆட்சியில் சீனாவின் அத்து மீறல்களைப் பட்டியலிட்டார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |