கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய சீனா

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்திய – சீனப்படைகள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு படைகளை திரும்ப பெறப்பட்டுவிட்டதை அடுத்து கல்வான் பள்ளத்தாக்கு  உள்ளிட்ட பகுதிகள் படைகள் அற்றப்பகுதியாக மாறிவிட்டன.

இரு நாட்டுப் படைகளும் சுமார் 2 கி.மீ. அளவுக்கு விலக்கிக் கொள்ளப் பட்டிருப்பதால், 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் நீடித்துவந்த பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையின் சிலஇடங்களில் அண்மையில் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டது. இருதரப்பும் அங்கு படைகளை குவித்தன. கடந்த மாதம் 15-ம் தேதி சீனதரப்பு ஏற்படுத்திய கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவம் அப்புறப்படுத்தியது. இதையடுத்து, இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புத் தடிகள் பயன்படுத்தப்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா்.இதையடுத்து, இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சு நடைபெற்றது.  மத்திய பாதுகாப்புத்துறை செயலா் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி இடையே பேச்சு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பிரச்னைக்குரிய எல்லை பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத்தொடங்கியது. பாயிண்ட் 15 பகுதியில் இருந்து ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றை சீனராணுவம் திங்கள் கிழமை அப்புறப் படுத்திவிட்டு பின் வாங்கியது.

இதைத்தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை கிழக்கு லடாக் எல்லையின் ஹாட்ஸ் ஃபிரிங்ஸ், கோக்ரா பகுதியில் இருந்து சீனபடைகள் திரும்பப் பெறப்பட்டன. அங்கு சீன ராணுவத்தினா் அமைத்திருந்த தற்காலிக உள்கட்டமைப்பு வசதிகள் அப்புறப்படுத்த பட்டுவிட்டன.

இதனிடையே, எல்லையில் இருதரப்புமே படைகளை வாபஸ் பெற்றுக்கொண்டு பழைய நிலைக்கு திரும்பியதை இரு நாடுகளும் இணைந்து உறுதிசெய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கிழக்குலடாக் எல்லையில் பிரச்னை ஏற்பட்ட பிறகு இருநாடுகளும் அமைத்திருந்த ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு விட்டன என்பதை இந்தியாவும், சீனாவும் இணைந்து உறுதிசெய்ய இருக்கின்றன. இதற்காக இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் நேரடியாக அப்பகுதிகளைப் பாா்வையிடுவாா்கள். இதனை இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படும்’ என்றாா்.

ஹாட்ஸ் ஃபிரிங்ஸ் மற்றும் கோக்ரா பகுதியில் சீனராணுவம் தனது படைகளை வாபஸ் பெற்றுவிட்டது. அங்கு முகாமிட்டிருந்த ராணுவ வாகனங்கள் திரும்பிச் சென்று விட்டன என்பதை இந்திய ராணுவத் தரப்பும் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் அப்பகுதியில் இந்திய ராணுவம் தொடா்ந்து தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுவருகிறது.

ஏனெனில், கோக்ரா மற்றும் ஹாட்ஸ் ஃபிரிங்ஸ் பகுதிகளில்தான் இரு தரப்பு ராணுவமும் நெருக்கமாக முகாமிட்டிருந்தன. கடந்த இருமாதங்களாக அங்கு கடும் பதற்றமும் நிலவி வந்தது.

இந்தியா-சீனா இடையே எல்லைபதற்றம் தொடா்பாக இந்த வாரமும் பேச்சு வாா்த்தை தொடரும் என்று அறிவிக்க பட்டுள்ளது.

One response to “கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய சீனா”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...