இந்தியமருந்து நிறுவனங்களின் மதிப்பை கொரோனா பாதிப்பு உலகம் அறியச் செய்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் வாய்ப்புகள் ஏராளம்உள்ளன. இதனை உலக நாடுகள் பயன்படுத்திக் கொள்ளளவேண்டும்.
முடியாததையும் முடித்துக்காட்டும் ஆற்றல் இந்தியர்களுக்கு உண்டு. உலக நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியா தன்னை சீர்திருத்திக்கொண்டு, சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டும் இருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளில் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. குறிப்பாக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவைவரியாக மாற்றியது, வர்த்தகம் தொடங்கு வதற்கான வழிகளை எளிமைப் படுத்தியது, உட்கட்டமைப்பை மேம்படுத்தியது என்பவை அவற்றுள் சில.
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் உலகத்திற்கு இந்தியமருந்து நிறுவனங்களின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்துள்ளது.
“எதைச் செய்ய முடியாது என்று நினைக்கிறோமோ அதை துணிந்து செய்து முடிக்கும் மனப்போக்கும் தன்னம்பிக்கையும் இந்தியர்களிடத்தில் எப்போதுமே இருக்கும். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை. பொருளாதாரவளர்ச்சி மேம்பட்டு வருவதைக் காணமுடிகிறது. இதுபோன்ற நெருக்கடியான சமயத்தில் உலகநாடுகள் கொரோனாவுடன் போராடி வரும் நிலையில், இந்தியா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது”
உலக நாடுகளிலேயே இந்தியாதான் மிகவும் திறந்த நிலைப் பொருளாதாரமாக உள்ளது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடுசெய்ய சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.
இந்தியா குளோபல் வீக் 2020 என்ற வீடியோ கான்பரன்சிங் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து பேசியது-
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |