இந்தியா டிஜிட்டல் மயமாக்க ரூ.75,000 கோடி முதலீடு; கூகுள்

இந்தியா டிஜிட்டல் மயமாக்க நிதியத்தை அறிவித்த கூகுள் நிறுவனம் இதன்மூலம் இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ.75,000 கோடி முதலீடுசெய்ய முடிவெடுத்துள்ளது.

கூகுள் சிஇஓ. சுந்தர்பிச்சை மற்றும் பிரதமர் நரேந்திரமோடி இடையே நடைபெற்ற பேச்சுகளுக்குப் பிறகு இந்த முடிவை கூகுள் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை கூறியதாவது, “இந்தமுதலீட்டை ஈக்விட்டி முதலீடுகள், கூட்டுறவுகள், உள்கட்டமைப்பு, சூழலியஅமைப்பு முதலீடுகள் என்ற வழியில் கூகுள் செய்யவுள்ளது. இந்தியாவின் எதிர் காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பே இந்தமுதலீட்டு முடிவு.

இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கத்தின் 4 முக்கியப் பகுதிகளில் இந்தமுதலீடு கவனம் செலுத்தும். ஒவ்வொரு இந்தியருக்கும் அவரவர் மொழியிலேயே தகவலை எளிதில் அணுக இந்தமுதலீடுகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் தனித்துவ தேவைகளுக்கு தகுந்தவாறு புதியதயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கட்டமைத்தல், வர்த்தகங்கள் டிஜிட்டல்மயமாக உருமாற அதிகாரம் வழங்கும் முதலீடுகளாக இது அமையும். சுகாதாரம், கல்வி, வேளாண்மை ஆகிய சமூக நன்மைகளுக்கான செயற்கைஅறிவு மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குதல்.

தொழில்நுட்பம் நம் தனிப்பட்ட உலகத்துக்கும் வெளியே சாளரங்களை திறந்துவிடுவதாகும். நான் இளம் பருவத்தில் இருக்கும் போது கற்றுக்கொள்ளவும் வளர்ச்சியடையவும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் புதிய வாய்ப்புகளைத் தருவித்தது. ஆனால் இதுவேறு ஒரு இடத்திலிருந்து என்னை வந்தடைவதற்காக நான் காத்திருக்க நேரிட்டது. இன்றைய இந்தியாவில் தொழில்நுட்பம் வேறு இடத்திலிருந்து வரவழைக்கப்பட வேண்டிய நிலையில் இல்லை. ஒட்டுமொத்த புதியதலைமுறை தொழில்நுட்பமும் இந்தியாவில்தான் முதலில் நிகழ்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்பாக மூன்றில் ஒருபங்கு வர்த்தகம் தான் ஆன்லைன் இருப்பைக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ 26 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தேடல் எந்திரத்திலும் வரைபடத்திலும் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் 150 மில்லியன் பயனாளர்கள் சேர்ந்து வருகின்றனர்.

கரோனா பெருந்தொற்றினால் டிஜிட்டல் சாதனங்களுக்கு பெரியதேவை ஏற்பட்டுவருகிறது. டிஜிட்டல்மயமாக்கம் மூலம் லாக்டவுன் காலக்கட்டங்களில் பலருக்கும் பொருட்களையும் சேவைகளையும் பெற பெரிய உதவிபுரிந்து வருகிறது.” என்றார் சுந்தர் பிச்சை.

முன்னதாக இன்று காலை சுந்தர் பிச்சையுடன் மேற்கொண்ட உரையாடல் பற்றி பிரதமர் மோடி தன் ட்விட்டரில் குறிப்பிட்ட போது, இன்று காலை மிகவும் பயனுள்ள ஒருஉரையாடல் சுந்தர் பிச்சையுடன் நிகழ்ந்தது. நாங்கள் பலவிஷயங்கள் பற்றி பேசினோம். குறிப்பாக நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரை யாடினோம்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் உருவாகிவரும் புதிய பணி கலாசாரம் பற்றி நான் பேசினேன். கரோனா தொற்று நோயால் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். மேலும், தரவுபாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினோம்.

டிஜிட்டல் துறைகளில் கூகுளின்பங்கு குறித்து கேட்டறிந்தேன். குறிப்பாக கல்வி, கற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூகுளின் முக்கியத்துவம் குறித்து தெரிந்ததுகொண்டேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...