முருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்

இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், கடவுளை போற்றும் பக்திப் பாடல்களையும், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் போற்றி பின்பற்றும் இந்து மத சடங்குகளையும் கேலி, கிண்டல் செய்தல், தரக்குறைவாக பேசுதல், உண்மைகளை திரித்துக் கூறுதல், தவறான அர்த்ததைப் பதிவு செய்தல் போன்ற பாதகச் செயல்களை சுரேந்திர நடராஜன் என்பவர் வீடியோ பதிவுகளாக “கருப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார்.

ஆபாச புராணம், கந்த சஷ்டி–12, என்ற தலைப்புகளில் இவர் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார். பல கோடி மக்களின் மன உணர்வுகளை கொச்சைப்படுத்தி, தமிழகத்தில் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் ஊறு விளைவிக்கும் சுரேந்திர நடராஜனின் செயல்பாடுகளின் பின்னணியில், சமூக விரோத, தேச விரோத, ஹிந்து விரோத அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா என்ற எண்ணம் அமைதியை விரும்பும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்க் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசம் என்பது ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளிலும் தினசரி ஒலிக்கும் சிறந்த பக்தி பாடலாகும். கந்த சஷ்டி கவசத்தைக் கேட்கும் போதே தமிழ் மக்களின் மனதில் ஏற்படுகிற மன அமைதியை, இறை நம்பிக்கையை, இவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ,தைப்பூச பண்டிகை நாட்களில் கடுமையான விரதம் இருந்து , தமிழ்க் கடவுள் முருகனுடைய அறுபடை வீடுகளை நோக்கி , கோடிக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்று முருகனை தரிசனம் செய்கிறார்கள். மேலும் சஷ்டி காலத்தில் லட்சோப லட்ச முருக பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து தமிழ்க் கடவுள் முருகனை தரிசித்து வருகிறார்கள். முருக பக்தர்களை அவமானப்படுத்தும் நோக்கில் சுரேந்திர நடராஜன் போன்ற கும்பல்கள் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர்.

சுரேந்திர நடராஜன் போன்ற கபடதாரிகளை கண்டித்தும், இவரை தேசத் துரோக வழக்கு மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரியும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் அனைவரும், அவரவர் வீடுகளுக்கு முன்பாக நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முருகப் பெருமான் படத்துடனும், கொடியுடனும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறவழி கண்டனப்போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நானும் எனது வீட்டின் முன்பாக நடக்கும் அறவழி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறேன். இதே போன்று, தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான முருக பக்தர்களும் , இறை நம்பிக்கை உள்ள அனைவரும், அவரவர் வீட்டின் முன்பு அறப்போராட்டம் நடத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

முருக பக்தர்களின் மனம் புண்படக்கூடிய வகையில் செயல்படுபவர்கள், யாருடைய பின்புலத்தில் இருந்தாலும் இவர்களைப் போன்றவர்களை எதிர்ப்பதில், ஒடுக்குவதில், பா.ஜ.க உறுதியாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நன்றி Dr.L.முருகன்

பாஜக மாநில தலைவர்

One response to “முருகப் பெருமானை கொச்சைப்படுத்திய கபடதாரிகளை கண்டித்து அறவழி போராட்டம்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...