மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டான்டன் செவ்வாய்க்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 85. இவரது மகன் அசுதோஷ் டான்டன் இதனை ட்விட்டரில் அறிவித்தார்.
ஜூன் 11ம் தேதி லக்னோவில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இவருக்கு சிறு நீர் கழித்தல் பிரச்சினை இருந்ததோடு சுவாசப் பிரச்சினைகளும் இருந்தன. இந்நிலையில் இன்று காலை 5.35 மணியளவில் அவர் உயிர்பிரிந்தது.
மக்கள் தங்கள் இறுதி மரியாதைகளை வீட்டிலிருந்த படியே மேற்கொள்ளவும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்கவும் அவரது மகன் அசுதோஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, “திரு டான்டன் அவர்கள் சமூகத்துக்காக செய்த இடையறா உழைப்புக்காக எப்போதும் நினைவில் கொள்ளப் படுவார். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வலுப்படுத்துவதில் அவரதுபங்களிப்பு ஏராளம். சிறந்த நிர்வாகியாக முத்திரைப் பதித்தவர் மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர். இவரதுமறைவு என்னை வருத்தத்தில் ஆழுத்துகிறது. அரசியல் அமைப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர் லால்ஜி. அடல்பிஹாரி வாஜ்பேயியுடன் நெருங்கிய நட்புகொண்டவர் லால்ஜி” என்று பதிவிட்டுள்ளார்.
லால்ஜி உ.பி. கல்யாண் சிங் அரசில் அமைச்சராக இருந்தவர். பிறகு பாஜக-பகுஜன் கூட்டணி மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் லால்ஜி பணியாற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |