பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியத்தலைமை ஆளும் பாஜகவுடன் உள்கையாகச் செயல்படுகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக உரக்கப் பேசி வருகிறது.
நேற்றும் அதன் செய்தித்தொடர்பாளர் கேரா, பேஸ்புக் மட்டுமல்ல வாட்ஸ் அப் குழுமமும் ஆளும் பாஜகவுக்கு நெருக்கம் என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார், அதனால்தான் சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக தலைவர்களின் வெறுப்பு உமிழும்பேச்சுகளை சமூக ஊடகங்களில் நீக்காமல் அதனை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் சாடி வருகிறது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸூக்கர்பர்க்குக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் ராகுல்காந்தியைத் தாக்கிப் பேசினார் பாஜக ஐடிப் பிரிவு தலைவர் அமித்மால்வியா, “அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளுக்கு காங்கிரஸும் ராகுல்காந்தியும் தங்களைத் தவிர பிறர்தான்காரணம் என கூறிவருகின்றனர்.
அவர்களுக்கு என்ன புரியவில்லை எனில், காங்கிரஸ்கட்சியை மக்கள் ஆதரிக்கவில்லை, ராகுல் காந்தியின் தொலை நோக்கற்ற தலைமையையும் மக்கள் விரும்பவில்லை என்பதே.
எனவே ஏதோ சமூகஊடகம் மட்டுமல்ல நாட்டுமக்களே இவர்களை நிராகரித்து விட்டனர்.
இந்த நாட்களில் காங்கிரஸின் மனீத் வாரி முதல் கே.சி.வேணுகோபால் வரை சமூக ஊடகங்களுக்கு கடிதம் எழுதத் தொடங்கி விட்டனர்.
2019 தேர்தலின் போது இவர்கள்தான் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவுடன் தொடர்புவைத்துக் கொண்டிருந்தனர். எனவே யாரை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டியுள்ளது” என்றார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |