உலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும்.

உலகசக்தியாக இந்தியா உருவெடுக்க உதவி செய்வோம். உலகின் இரண்டு பழமையான மற்றும் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, கடந்த, 20 ஆண்டுகளில் பெரும்வலிமையை பெற்றுள்ளது.உலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக இந்தியா நிச்சயம் உருவெடுக்கும். அதற்கு, அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யும். இதில், இந்தியா – அமெரிக்கா இடையேயான, ராணுவ ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும். ராணுவ பலத்தில், இந்தியா தற்சார்பு அடைந்து வருகிறது. எந்தநாடும், ராணுவபலத்தில் மற்ற நாடுகளையே முழுமையாக சார்ந்திருக்க விரும்பாது.

கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பிரதமர்களாக இருந்தவர்கள், இந்திய – அமெரிக்க நட்புறவில் பெரும்ஆர்வம் காட்டியதை மறக்கமுடியாது, மறுக்கவும் முடியாது. பயங்கரவாதத்தை எதிர்க் கொள்ளவும், வளர்ச்சியடையவும், இருநாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட, இரு நாட்டு தலைவர்களும் விரும்பினர். இன்று, ராணுவம் மட்டுமின்றி, விண்வெளி ஆய்வு, எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல துறைகளில், இந்தியாவும், அமெரிக்கவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.நெருங்கிய உறவுகளில் தடைகள், பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கமுடியாது. ஆனால், இவற்றை பேச்சுமூலம் தீர்வுகாண்பதில், இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன.

பொருளாதார உறவுகளை மேம்படுத்த, வர்த்தகம்தொடர்பான விவகாரங்களில் கருத்து வேறுபாடுகளை நீக்குவதில், இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில், பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும், அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அமெரிக்காவில் அதிபர்தேர்தல் நடப்பதற்கு முன், இருநாடுகளுக்கு இடையே சிறியளவில், வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக அதிகவாய்ப்புகள் உள்ளன.

இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கவேண்டும் என்பதில், அமெரிக்கா உறுதியாக உள்ளது. இந்தபிராந்தியம் தற்சார்புடன் திகழ, இந்தியாவின் பங்கு அவசியம். இந்தியா இன்றி, இந்த பிராந்தியத்தில் எதுவும் வெற்றிபெறாது. இந்திய — பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தி, ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில், இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

சீனாவை ஒவ்வொரு நிலையிலும் தனிமைப் படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். அதை, பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில், அமெரிக்கா செய்துவருகிறது. அதுபோல, இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னை, தென் சீனக்கடல் பகுதியை உரிமை கோரும் விவகாரம் ஆகியவற்றில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன், உலக வர்த்தக அமைப்பில், சீனா இணையும்போது, அந்நாட்டுக்கு சிறப்பு உரிமைகள் அளித்து, நவீன உலகத்துடன் இணைக்கவே, அமெரிக்கா உள்ளிட்ட இதரநாடுகள் விரும்பின. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தனக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாய்ப்பையும், சீனா வீணாக்கி விட்டது.பிற நாடுகளின் நிலம் மற்றும் கடற்பகுதிகளை ஆக்ரமிக்கும் முயற்சிமுதல், தொழில்நுட்பங்களை திருடுவதுவரை அனைத்து கைவரிசைகளையும் சீனா காட்டி வருகிறது. சீனா, திபெத்தின் பாரம்பரிய கலாசாரத்தை அழிக்க முயற்சிக்கிறது.

பிரிட்டன் உடன் செய்த ஒப்பந்தத்தை மீறி, ஹாங்காங்கை தன் முழுகட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் வரலாற்று பண்பாட்டை சிதைக்கமுயல்கிறது. அமெரிக்கா உடனான பரஸ்பர வர்த்தகத்தில், சுயலாபத்தில் குறியாக உள்ளது. அண்டை நாடான இந்தியாவில், எல்லை தகராறில் ஈடுபடுகிறது. அதனால், சீனா எடுக்கும் எந்தவொரு நிலைப்பாட்டிற்கும் எதிராகவே அமெரிக்கா நடந்து கொள்ளும். சீனாவை, அனைத்து மட்டத்திலும் ஓரங்கட்டுவோம்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்., எனப்படும் அமெரிக்க – இந்தியதிட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், ‘இந்திய, அமெரிக்க லீடர்ஷிப் மாநாடு’ நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் ஸ்டீபன் பீகன் கலந்து கொண்டு பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...