உலக அறிவுசார் சொத்துஅமைப்பு, கார்னெல் பல்கலைக் கழகம் மற்றும் இன்சீடு பிசினஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ‘உலகளாவிய புதுமைகுறியீடு – 2020’ பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம், 131 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் போன்ற ஆசியநாடுகள், கண்டுபிடிப்பு தரவரிசையில் கணிசமாக முன்னேறியுள்ளது தெரியவந்துள்ளது.
முதல், 50 நாடுகள்வரிசையில், இந்தியா முதன் முறையாக இடம்பிடித்துள்ளது. இதற்கு முன் இருந்த இடத்திலிருந்து, நான்கு இடங்கள் முன்னேறி, 48வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், மத்திய மற்றும் தெற்குஆசியாவில் உள்ள நாடுகள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது
புதுமை தரவரிசையில் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும், முதல், 10 இடங்களை, அதிக வருவாய் கொண்ட நாடுகளே கைப்பற்றி உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்த நடுத்தர வருமானம்கொண்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. உலகில், நடுத்தரவருமானம் கொண்ட நாடுகளில், மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |