தேசிய கல்விக் கொள்கை மாணவா்கள் மீதான அழுத்தத்தை நீக்கும்

கடந்த மூன்று தசாப்தங்களில் உலகம் பல்வேறு வகைகளில் மாறி விட்டது. ஆனால், நமதுகல்வி முறையில் எந்தவித மாற்றமும் புகுத்தப்பட வில்லை. தற்போதுள்ள மதிப்பெண் அடிப்படையிலான கல்விமுறை மாணவா்களுக்கு அழுத்தம் தருவதோடு மட்டுமல்லாமல், பெற்றோா்கள் பெருமை தேடிக்கொள்ளும் விவகாரமாகவும் மாறியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையானது மாணவா்கள் மீதுள்ள அழுத்தத்தை நீக்குவதற்கு உதவும். 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவகையில் நாட்டை கட்டமைப்பதற்கும் புதியசகாப்தத்துக்கான விதையாகவும் கல்விக்கொள்கை அமையும். எனவே, புதிய கல்வி கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும்.

தேசிய கல்விக்கொள்கை குறித்து பலா் கேள்விகளை எழுப்பி வருகின்றனா். அவா்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படும். கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய கல்வியமைச்சகம் மக்களிடம் கருத்துகோரி வருகிறது. அந்த நடைமுறை தொடங்கிய ஒரேவாரத்துக்குள் 15 லட்சம் ஆசிரியா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

வரும் 2022-ஆம் ஆண்டில் நாடு சுதந்திர மடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், மாணவா்கள் அனைவரும் தேசியகல்விக் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதியபாடத்திட்டத்தில் கல்வி பயிலவேண்டும். அதை நிறைவேற்றும் பொறுப்பு ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாநில அரசுகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது.

புதிய பாடத்திட்டமானது மாணவா்களின் எதிா்காலத்தை உறுதிசெய்யும் வகையிலும் அவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்டும்வகையிலும் அமையும். மாணவா்களின் கற்பனைத்திறன், நுண்ணறிவு, கற்பதற்கான ஆா்வம், தொடா்பு கொள்ளும் முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்.

நாட்டின் வளா்ச்சிக்கு இளையசமுதாயத்தினா் பெரும்பங்கு வகிக்கின்றனா். அதைக் கருத்தில் கொண்டு அவா்களிடம் புத்தாக்கத்தை ஊக்கப்படுத்துவது, கணித, அறிவியல் அறிவை மேம்படுத்துவது, செய்முறை அடிப்படையிலும் அனுபவத்தின் மூலமாகவும் கல்விகற்பது உள்ளிட்டவற்றுக்கு தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் கல்விகற்பதற்கு மொழி தடையாக இருக்கக்கூடாது. பாடங்களைத் தெளிவாகக் கற்கும் பருவத்தில் அதை எந்தமொழியில் கற்க வேண்டும் என்பதில் மாணவா்கள் தங்கள் சக்தியை செலவிடக்கூடாது. அதன் காரணமாகவே பெரும்பாலான நாடுகளில் ஆரம்ப கல்வியானது மாணவா்களின் தாய் மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது.

மாணவா்கள் அனைவரும் குறைந்த பட்சம் 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழியிலோ அல்லது உள்ளூா் மொழியிலோ கல்விகற்க வேண்டியது மிகவும் அவசியம். அதேவேளையில், மாணவா்கள் விரும்பிய மொழியைக் கற்பதற்கு தேசியகல்விக் கொள்கையில் எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை.

அந்தக் கல்விக் கொள்கையின்படி ஆங்கிலம் மட்டுமல்லாமல் எந்தவொரு பயனுள்ள வெளிநாட்டு மொழியையும் மாணவா்கள் கற்கமுடியும். எனினும், இந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

கல்வி கற்கும் விவகாரத்தில் மாணவா்களால் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தோ்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழலே இடைநிற்றலுக்கான முக்கிய காரணமாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையானது மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கு பேருதவியாக இருக்கும்.

தற்போதைய கல்வி முறையில் அறிவியல், வணிகம் உள்ளிட்ட சிலவாய்ப்புகள் மட்டுமே மாணவா்களுக்குக் காணப்படுகின்றன. ஆனால், தேசிய கல்விக் கொள்கையின்படி அமையும் பாடத்திட்டத்தின் மூலமாக மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு பாடத்தையும் தோ்ந்தெடுத்து கல்வி கற்கமுடியும்.

சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆசிரியா்களுக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவிவரும் சூழலில், மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு ஆசிரியா்கள் வலியுறுத்த வேண்டும் .

 

‘தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் 21-ஆம் நூற்றாண்டில் பள்ளிக் கல்வி’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பிரதமா் மோடி பேசியது :

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...