திருச்சி மாவட்டம், மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய கல்விக்கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்விவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தும், டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது பேசியவர், “தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் 8 பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஏழைகளின் முன்னேற்றம் கல்வியை சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது இதில் உள்ள முக்கியவிஷயம். ஆனால், தமிழில் கட்டாயம் படிக்கவேண்டும் என்பதை தி.மு.க-வினர் சொல்லமாட்டார்கள். வரைவு அறிக்கையில் 3-ஆம் மொழியாக கட்டாயம் இந்திபடிக்க வேண்டும் என்று இருந்தது. அதனை ஏதாவது ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாகப் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மாற்றினார்.
மும்மொழிக் கொள்கை, தேசியக்கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் தொடங்கி 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது ஒரு அரசியல் புரட்சி. மே இறுதிக்குள் ஒரு கோடியை எட்டவேண்டும் என்பதே இலக்கு. தேசிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது. ஆனால், இதை மறைத்து தி.மு.க-வினர் அரசியல் செய்கின்றனர்.
தொகுதி மறுவரையறை மக்கள்தொகை அடிப்படையில் நடக்காது; விகிதாச்சார அடிப்படையில்தான் நடக்கும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர் தெரிவித்தும்கூட தேவையில்லாத ஒரு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தியுள்ளார். கடந்தஆண்டு தமிழகம் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. மொத்தகடன் தொகை ரூ. 9 லட்சம் கோடியாகும். இந்தியாவில் யாருமே இவ்வளவு கடன் வாங்கவில்லை. வரலாறுகாணாத மோசமான ஆட்சிக்கு தமிழக மக்கள் 200 தொகுதிகளை எப்படித் தருவார்கள்?
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போது தனியார் பள்ளிக்கு அனுமதிகிடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியையும் பி.எம்.ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம்” எனக் கூறினார்.
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |