பாரம்பரிய உடல் நல பாதுகாப்பு அமைப்பு கொண்ட நாடு இந்தியா

ஆயுஷ் அமைச்சகத்துக்கும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்திற்குமிடையே போஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று புது தில்லியில் கையெழுத்திடப்பட்டது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட, , பரிசோதித்துப் பார்க்கப்பட்ட, ஆயுஷ் அடிப்படையிலான தீர்வுகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்தியா ராஜேஷ் கொட்டேச்சா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சக செயலர் ராம் மோகன் மிஸ்ரா ஆகியோர், இந்த ஒப்பந்தத்தில் மத்திய மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி முன்னிலையில் கையெழுத்திட்டனர். ஆயுஷ் அமைச்சர் திரு. ஸ்ரீதர் எஸ்ஸோ நாயக் காணொலி மூலமாக விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய திருமதி இரானி, நாட்டில் தாய்மார்கள், குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த பிரச்னைக்கு தீர்வு காண, இரு அமைச்சகங்களும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் உதவும் என்று கூறினார். வருங்காலத்தில் விரைவில் அனைத்து அங்கன்வாடிகளிலும் ஊட்டச்சத்து தோட்டங்கள், மருத்துவ தோட்டங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்

 

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீபத் நாயக், மிதமான, நடுத்தரமான ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்குவதற்கு ஆயுர்வேத முறைகளும் ஆயுஷ் முறைகளும் அதிக அளவில் பங்காற்ற முடியும் என்று கூறினார். கருவுற்ற பெண்களுக்கு சரியான உணவு உட்கொள்ள வகை செய்தல், பாலூட்டும் தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு பாலூட்டும் முறைகளை எடுத்துக் கூறுதல், பாலூட்டும் தாய்மார்களுக்கு பால்சுரக்க உதவுவதற்கான பாரம்பரிய பொருட்களை உட்கொள்ள வகை செய்தல்,

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை அளிக்க வகை செய்தல் போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து இரு அமைச்சகங்களும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார். பாரம்பரிய உடல் நல பாதுகாப்பு அமைப்பு கொண்ட விரிவான நெட்வொர்க் உள்ள நாடாக இந்தியா திகழ்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பாரம்பரிய முறைகள் எளிதில் அணுகக் கூடியவையாகவும், எளிதில் பெறக் கூடியவையாகவும் பாதுகாப்பானதாகவும், மக்களின் நம்பிக்கையைப் பெற்றவையாகவும் உள்ளன என்று கூறினார். எங்கெல்லாம் இதுபோன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளதோ, அங்கெல்லாம் தொடர்புடைய மருத்துவ முறைகளை அமைச்சகம் ஒருங்கிணைத்து வருகிறது என்று கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வெளிப்பாடாக ஆயுஷ் அமைச்சகமும், மத்திய மகளிர் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து பணியாற்றி போஷன் அபியான் திட்டத்தில் ஆயுஷ் முறைகளை ஒருங்கிணைப்பது பற்றியும், ஆயுர்வேதம் யோகா மற்றும் இதர ஆயுஷ் முறைகளில் பல்வேறு கோட்பாடுகளையும் வழக்கங்களையும் பயன்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்கும். போஷன் அபியான் அல்லது தேசிய ஊட்டச்சத்து இயக்கம் என்பது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், குழந்தைகள் நலன், கருவுற்ற பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியவற்றின் ஊட்டச்சத்து மேம்படுவதற்காக நடைமுறைப்படுத்தும் பல்வேறு திட்டங்களில் முதன்மை திட்டமாகும்.

முக்கியமாக இணைந்து பணியாற்றியக் கூடிய தளங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளவை பின்வருமாறு

போஷன் திட்டத்தில் ஆயுஷ் முறையை ஒருங்கிணைப்பது

ஆயுர்வேதம், யோகா மற்றும் இதர துறைகளின் கோட்பாடுகள், வழக்கங்கள் ஆகியவை மூலமாக ஊட்டச்சத்து குறைபாட்டை கட்டுப்படுத்துவது. இந்த கூட்டு முயற்சியின் மூலம் பின்வரும் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்

அங்கன்வாடி மையங்களில்

அ) யோகா நிகழ்ச்சிகள்

ஆ) ஆயுஷ் பணிப்படை மாதம் ஒருமுறை அங்கன்வாடி மையத்திற்கு செல்லும். இதைத் தொடர்ந்து ஆயுஷ் மருத்துவ அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாநில சுகாதார அதிகாரிகள் (மகளிர் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை) ஆகியோருக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது

இ) போஷன் வாடிகா ஏற்படுத்துவது

ஆயுஷ் ஊட்டச்சத்து திட்டம்

அ) எடுத்துக்கொள்ளப்பட்ட இலக்கு மக்களின் ஊட்டச்சத்து நிலை பற்றிய அடிப்படை விவரங்களை உருவாக்குவது

ஆ) தொலைபேசி மருத்துவ சேவை அளிப்பது, ஆயுஷ் உதவி தொடர்பு எண்/ தொலைத்தகவல் தொடர்பு மையம் (பொது சேவை மையங்கள் மூலமாக )ஏற்படுத்துதல்

இ) மண்டல வாரியாக ஊட்டச்சத்து முறைகளை அமைத்தல்

ஈ) அறிவியல் ரீதியான மதிப்பீட்டிற்காக அனைத்து முயற்சிகளையும் முறைப்படி ஆவணபடுத்துதல்

3.பாரம்பரியமான உள்நாட்டு உணவு வகைகள் குறித்து சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஐ ஈ சி செயல்பாடுகளை மேற்கொள்ளுதல். ஆயுர்வேதம் மற்றும் பிற ஆயுஷ் அமைப்புகள் அடிப்படையிலான ஊட்டச்சத்து கோட்பாடுகளை மேம்படுத்துதல்

கள அளவில் சமுதாயத்தினருக்கு ஆயுர்வேத ஊட்டச்சத்து செய்திகள் வழங்கும் அங்கன்வாடி பணியாளரை ‘தாத்ரி’ என்று அழைத்தல். ஊட்டச்சத்துக்கான செயல்திட்டங்களை புதுப்பிக்கக்கூடிய உடல்நல செயல்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட செயல்பாட்டாளர் நியமிக்கப்படுதல்

ஆயுர்வேதம் மற்றும் பிற ஆயுஷ் அமைப்புகளை பரவலாகக் கொண்டு செல்வதற்காக இதர செயல்பாடுகளை மேற்கொள்ளுதல். ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலமாக முழுமையான ஊட்டச்சத்துக்கு கவனம் அளித்தல்

இரண்டு அமைச்சகங்களும் இணைந்து #Ayush4Anganwadi ஆயுஷ்4அங்கன்வாடி என்ற ஹாஷ்டாகை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலமாக, டிஜிட்டல் தளங்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...