எந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது

இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாட்டின்போது சீனாவை தாக்கும் வகையில் கடுமையாக கருத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தினார். எந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்தகொரோனா காட்டிவிட்டது என்று சீனாவை மறைமுகமாக சாடினார்.

இந்தியாவில் வளர்ந்துவரும் காற்றாலை ஆற்றல் துறையில் டென்மார்க் மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின், வெண்மை புரட்சிக்கும் கைகொடுத்துவருகிறது. இந்தியாவும் டென்மார்க்கும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்டுவருகின்றன, காலநிலை மாற்றத்திற்கு எதிராகபோராட இருநாடுகளும் இணைந்துள்ளன.

கடந்த சிலமாதங்களாக, டென்மார்க் நிறுவனங்களான எல்.எம். விண்ட், ஹால்டோர் டாப்சோ மற்றும் நோவோசைம்ஸ் போன்றவை மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு பங்களிக்கும் வகையில் இந்தியாவில் உற்பத்திபிரிவுகளை அமைக்க உறுதியளித்துள்ளன.

மற்றொரு பெரியடென்மார்க் நிறுவனமான மெர்ஸ்க், இந்தியாவில் உள்ள அனைத்து ஷிப்பிங் கண்டெய்ணர்களிலும் கிட்டத்தட்ட 19 சதவீதத்தை கொண்டுள்ளது. அதேநேரத்தில், டென்மார்க்கின் டான்ஃபோஸ் நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேளாண் விளைபொருட்களுக்கு குளிர் பதனக் கிடங்குகளை அமைத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சி மாநாடு ஆன்லைன் வாயிலாக நடக்கப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதன் படி பிரதமர் மோடியும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனும் ஆன்லைன் வாயிலாக சந்தித்துபேசினர். கொரோனா காரணமாக இருதரப்பும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை.

 

பேசும் போது எந்த ஒரு பொருள் உற்பத்திக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்தகொரோனா காட்டிவிட்டது என்றார். சீனா தான் உலகிற்க மருந்து உள்பட பலமுக்கிய பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்துவந்த நிலையில், திடீரென கொரோனாவால் நிறுத்திக்கொண்டது. இது உலக நாடுகளை கடுமையாக பாதித்தது. இதைத்தான் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

சீனாவை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் மற்றநாடுகளும் உற்பத்தி மற்றும் விநியோகத்தை இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செய்லபட்டு வருவதாகவும், இந்தியாவைபோன்ற எண்ணம் கொண்ட மற்ற நாடுகளும் இதில் சேரலாம்.” என்றும் டென்மார்க் பிரதமரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.