அயோத்தி பாபர் மசூதி இடிப்புவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட்பட, 32 பேரையும் விடுதலை செய்து, ‘பாபர் மசூதி இடிப்பில் சதிச் செயல் இல்லை; சமூக விரோதிகள் தான், மசூதியை இடித்தனர்; குற்றம் சாட்டப்பட்டவர்கள், அதைத் தடுக்க முயற்சித்துள்ளனர்’ என, நீதிபதிஅளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது.
உத்தர பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ம் ஆண்டு, டிச., 6ம் தேதி இடிக்கப்பட்டது. மசூதியை இடித்ததாக அடையாளம்தெரியாத லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது, லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மசூதியை இடிக்க சதிதிட்டம் தீட்டியதாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்யார், அப்போதைய உ.பி., முதல்வர் கல்யாண் சிங், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்ட, 48 பேர்மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இதில், ரேபரேலி சிறப்புநீதிமன்றம், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து, 2001ல் தீர்ப்பளித்தது. சிறப்புநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010-ம் ஆண்டு உறுதிசெய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., சார்பிலும், ஹாஜி மெஹபூப் என்பவர் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதைவிசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க, 2017, ஏப்ரல், 19ல் உத்தரவிட்டது. மேலும், ரேபரேலியில் உள்ள வழக்கை, லக்னோ சி.பி.ஐ., சிறப்புநீதிமன்றத்துக்கு மாற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்கவேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, லக்னோ சிறப்பு சி.பி.ஐ., நீதிமன்றத்தில், நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில், விசாரணை நடந்து வந்தது.
விசாரணைக்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்த உச்ச நீதிமன்றம், செப்., 30ம் தேதிக்குள் தீர்ப்புவழங்க, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., 351 பேரிடம் விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு எதிராக, 600 பக்க அறிக்கையை, லக்னோ நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது. அதனடிப்படையில், 48 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களில், 16 பேர் உயிரிழந்து விட்டனர்.
இந்த வழக்கில்,சி.பி.ஐ., எங்களை தேவையின்றி சிக்க வைத்திருக்கிறது; அரசியல் நெருக்கடி காரணமாகவே, எங்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது’ என, அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்தவழக்கில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறியதாவது:பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதற்கு, போதுமான ஆதாரமில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள், மசூதியை இடிக்கவில்லை. மசூதியை இடிக்கவிடாமல், அவர்கள் தடுக்கமுயற்சித்து உள்ளனர்.
அசோக் சிங்கால் உள்ளிட்ட சங்பரிவார் தலைவர்கள், குழந்தை ராமர்சிலை இருந்ததால், மசூதி இடிக்கப்படுவதை தடுக்க முயற்சித்துள்ளனர். சி.பி.ஐ., வழங்கிய ஒலி மற்றும் ஒளி ஆதாரங்களின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட வில்லை. சி.பி.ஐ., வழங்கிய பல்வேறு ஆதாரங்களில், ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.சமூக விரோத கும்பல்தான், மசூதியை இடித்துள்ளது. இதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்பில்லை, அதனால், குற்றம் சாட்டப்பட்ட, 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு வரவேற்க தக்கது. கடந்த ஆண்டு, நவ., 9ம் தேதி, அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்டுவது குறித்து அளித்த தீர்ப்பின் போதே அயோத்தி விவகாரம் முடிந்து விட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அணைத்து சமூகமும் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும்.
எதிர் காட்சிகளை பொறுத்தவரை அவர்களிடம் மக்களுக்கு நன்மைபயக்கும் திட்டங்கள் ஏதும் இல்லை. மக்கள் சேவைகளினால் திருப்தி படுத்த வாய்ப்பும் இல்லை. வெறுப்பு தீயினில் எண்ணையை ஊற்றுவது ஒன்றே அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, .
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |