ஸ்வா நிதி திட்டத்தின் கீழ் 7.85 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் 

பிரதமரின் நடைபாதை வியாபாரிகள்  தற்சார்புநிதி( ஸ்வா நிதி) திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம் மற்றும் எஸ்பிஐ இணையதளம் இடையே ஏபிஐ ( Application Programming Interface ) ஒருங்கிணைப்பை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளர், துர்கா சங்கர் தொடங்கிவைத்தார்.   இதன் மூலம் பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம் மற்றும் எஸ்பிஐ இ-முத்ராஇணையதளம் இடையே, தகவல்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொண்டு, நடைபாதை வியாபாரிகளின் கடன்களுக்கு எளிதாகவும, விரைவாகவும்  ஒப்புதல் அளிக்கமுடியும். இது தொழில் முதலீடுகடன் கோரும் நடைபாதை வியாபாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  இதேபோல் மற்றவங்கிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது

குறித்து மத்திய அரசு  ஆலோசித்து வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் விரைவில் நடக்கவுள்ளன.

கொவிட்-19 முடக்கம்காரணமாக பாதிக்கப்ட்ட நடைபாதை வியாபாரிகளுக்காக, பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கப் பட்டது.  இத்திட்டம் மூலம் 50 லட்சம் நடைபாதை வியாபாரிகள் பயனடைய  இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.  இதன்மூலம் நடைபாதை வியாபாரி, ரூ.10 ஆயிரம் தொழில் முதலீட்டு கடன்பெற்று, அதை மாத தவணையாக ஒராண்டுக்குள் திருப்பிச் செலுத்த முடியும்.  சரியானநேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தினால், ஆண்டுக்கு 7 %  வட்டி மானியம் பயனாளிகளின் வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்படும். கடனை முன் கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கப்படாது. மாததவனையை டிஜிட்டல் மூலமாக செலுத்தினால் ஆண்டுக்கு ரூ.1,200 வரை பணம் திரும்ப கிடைக்கும்.

பிரதமரின் ஸ்வா நிதி திட்டத்தின் கீழ், கடந்த 6ம் தேதி வரை, 20.50 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 7.85 லட்சம் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 2.40 லட்சம் கடன்கள்  வழங்கப்பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...