பஸ்வானின் பாதைகள் பல ஆனால் பயணம் ஒன்றே-

மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் அரசியல் வாழ்வில் பலபாதைகள் இருந்தாலும் அவரின் பயணம் பீகார் மக்களுக்காகவே இருந்துள்ளத்தை அறிந்துகொள்ள முடியும்.

உலகிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அரசியல் வாதி என்று கின்னஸ் ரெக்கார்ட் படைத்த ராம் விலாஸ் பஸ்வான் பீகார் அரசியலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செல்வாக்கு பெற்று விளங்கியவர்.

பீகார் அரசியலில் பிஜேபி, காங்கிரஸ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், லாலு, நிதிஷ்குமார் என்று அனைவருடன் இணைந்து அரசியல்செய்த ஒரே ஒருவர் ராம்விலா ஸ்பஸ்வான் மட்டுமே..பீகார் அரசியலில் லாலு நிதிஷ்குமார்க்கு முன்பே அரசியலில் நுழைந்து வெற்றிபெற்றவர் ராம்
விலாஸ் பஸ்வான்தான்.

தன்னுடைய 23 வயதில் ஒருவர் வேலைக்கு போவதே கஷ்டம்தான். ஆனால் ராம் விலாஸ் பஸ்வான் தன்னுடைய 23 வயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பியாக போலீஸ்துறையில் நுழைந்து அதே வயதில் போலீஸ் வேலையை தூக்கி எறிந்துவிட்டு
எந்த ஒரு அரசியல்பின்னணியும் இன்றி எம்எல்ஏவானது எவ்வளவு பெரியவிசயம்.

தன்னுடைய 23 வயதில் பீகார் சட்டமன்றத்திற்கு அலாலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக இருந்த மிஷ்ரிசடாவை தோற்கடித்து ராம்விலாஸ் பஸ்வான் நுழையும் பொழுது பீகார் மாநிலமே யாருப்பா இந்தபையன் என்று
அண்ணாந்து பார்த்தது.

அந்த காலத்தில் கம்யூனிச சித்தாந்தத்திற்கும் காங்கிரசுக்கும் இடைப்பட்ட ஒரு்அரசியல் தளம் இருந்துவந்தது. இதை சோசலிசம் என்று சொல்லிக் கொண்டு அரசியல் நடத்திவந்தார்கள்.அதில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ராம்மனோகர் லோகியாவும் ஒருவர்

இந்த சோசலிஸ்ட் லிஸ்டை தேடிப்பிடித்து பார்த்தால் முக்கால்வாசி பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள் அதனால் அங்கே பிடிக்கவில்லை என்றால் கம்யூனிஸ அரசியலுக்கு செல்லாமல் பாதி காங்கிரஸ் மீதிகம்யூனிசம் என்று கலந்துகட்டி சோசலிசம் என்கிற கொள்கையை பிடித்துக்கொண்டு அரசியல் செய்துவந்தார்கள்

இந்த சோசலிச கூட்டத்திற்கு காட்பாதர் யார் என்றால் நம்ம ராம்மனோகர் லோ கியாவைத்தான் சொல்லலாம்.அந்தகாலத்தில் காங்கிரஸ் கம்யூனிசம் பிடிக்காத இளைஞர்கள் தங்களை சோசலிஸ்ட் என்றுசொல்லிக் கொள்வார்கள்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராம் விலாஸ் பஸ்வான் நிதிஷ். லாலுபோன்ற பீகார் அரசியல்வாதிகள் எல்லாம் இந்த ரகம்தான்.மாநிலத்திற்கு ஒருசோசலிச கட்சி இருந்தாலும் ராம் மனோகர் லோகியாவின் பிரஜா சோசலிஸ்ட் கட்சிக்குதான் அந்த காலத்தில் செல்வாக்கு இருந்தது. அதில்
தான் லோகியா ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற பெருந்தலைகள் இருந்த கட்சி.

இந்த பிரஜா சோசலிஸ்ட் கட்சியை உடைந்து 1964 ல் சம்யுக்தா சோசலிச கட்சியாக உருமாறிய பொழுது அதை பீகாரில் வழிநடத்திய மண்டல் கமிசனின் பிதாமகன் பி்பி மண்டல் உடன் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் ராம்விலாஸ் பஸ்வான். அப்பொழுது சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியில் ராம்விலாஸ் பஸ்வானின் நெருங்கிய நண்பரே ஜார்ஜ் பெர்னாண்டஸ்தான்

எமெர்ஜென்சிக்கு பிறகு இந்திராவை தோற்கடிக்க 1977 ல் ஜனதாகட்சி உருவான பொழுது பிஜேபியின் அன்றைய பெயரான ஜனசங்கத்துடன் இணைந்து பயணித்தவர்கள்தான் இந்த சோசலிஸ்ட்கள். பீகார் அரசியலை உன்னிப்பாகபார்த்து வருபவர் களுக்கு ஆரம்ப காலத்தில் இ்ருந்தே நிதிஷை விட லாலு ராம்விலாஸ் பஸ்வானுக்குதான் செல்வாக்கு அதிகம்
என்று அறிந்து கொள்ளலாம்

1977 தேர்தல்பற்றி அனைவருக்கும் தெரியும் ஐனதா கட்சி சார்பில்.போட்டியிட்ட லாலு சப்ரா லோக்சபாவில் வெற்றிபெற.ராம்விலாஸ் பஸ்வான் ஹாஜிபூர் லோக் சபா தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார். ஆனால் நிதிஷ் அவர் பிறந்த நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஹர்னாட் தொகுதியில் மண்ணை கவ்வினார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.1977ல் மட்டுமல்ல 1980 ல் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட நிதிஷால் சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்

ஆனால் அதே நேரத்தில் லாலு 1977 ல் பாராளுமன்ற தேர்தல்.1980ல் சட்ட மன்றதேர்தல் வெற்றி என்று லாலு மாஸ் லீடராக வளர்ந்தார் என்றால் ராம்விலாஸ் பஸ்வான் 1977 1980 என்று ஹாஜீபூர் லோக்சபா தொகுதியில் பட்டைய கிளப்பினார்.. உலகில் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அரசியல்வாதி என்கிற கின்னஸ் ரெக்கார்டை உருவாக்கியவர்
ராம்விலாஸ் பஸ்வான்தான்.

1977 ல் ராம்விலாஸ் பஸ்வான் ஹாஜீபூர் லோக்சபா தொகுதியில் முதல் முறையாக
போட்டியிட்டு 4,24,545 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்
த்தி கின்னஸ் ரெக்கார்டை உருவாக்கினார்.ஹாஜீபூர் லோக்சபா தொகுதியில் 10 முறை போட்டியிட்டு உள்ள ராம்விலாஸ் பஸ்வான 8 முறை வெற்றிபெற்று இருக்கிறார்.1984 இந்திரா படுகொலையில் எதிர்கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்த பொழுதும் ராம்விலாஸ் பஸ்வான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார்.

அதே மாதிரி 2009 லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி லாலுவுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்தார். 1991 லோக்சபா தேர்தலில் மட்டுமே ராம்விலாஸ் பஸ்வான் ஹாஜீபூர் தொகுதியை விட்டு விட்டு ரோசரா தொகுதியில்
போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார்

ராம்விலாஸ் பஸ்வான் விபி சிங் தேவகவுடா வாஜ்பாய் மன்மோகன் சிங் மோடி என்று 5 பிரதமர்களின் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்ததன் மூலமாக பல கட்சிகளிலும் சித்தாந்தம் தாண்டி அனைத்து கட்சி தலைவர்களிடமும் ஒருபுரிதலையும் அன்பையும் பெற்று இருந்தார்

சோசலிஸ்ட் கட்சியில் துவங்கிய தன்னுடைய அரசியல் பயணத்தை லோக்தளம் ஜனதா கட்சி ஜனதா தளம் ஐக்கிய ஜன தா தளத்தோடு முடித்துக் கொண்டு 2000 ம் ஆண்டில் லோக்ஜன சக்தி என்கி ற தனிக்கட்சியை ஆரம்பித்து புதிய பாதையை உருவாக்கி கொண்டார்.

தனிக்கட்சி ஆரம்பித்த பிறகு ராம்விலா ஸ் பஸ்வான் காங்கிரஸ் பிஜேபி கூட்டணியில் மாறி மாறி இருந்து இருந்தாலும் பிஜேபி கூட்டணியில் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியும் மரியாதையும்
கிடைத்து இருக்கிறது

2013 ல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பிஜேபி கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறி பிஜே பிக்கு எதிராக பீகாரில் லாலு பஸ்வான் உடன் இணைந்து ஒரு மிகப்பெரிய கூட்டணியை அமைக்க விரும்பினார்.

மோடியின் அழைப்பை ஏற்று அந்த கூட்டணியை ஆரம்ப கட்டத்திலேயே உடைத்து விட்டு பிஜேபி கூட்டணியில் ராம் விலாஸ் பஸ்வான் இணைந்த்தால் தான் 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபிக்கு பீகாரில் மாபெரும்வெற்றி சாத்தியமானது.

20 வருடமாக பிஜேபி கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் மோடிக்கு எதிராக 2014 ல் உருவாக்க இருந்த மாபெரும் கூட்டணியை உடைத்ததால்தான் மோடிக்கு ராம்விலாஸ் பஸ்வான் மீது தனிப்பட்ட அன்பு உருவானது.ராம் விலாஸ் பஸ்வான் மறைந்தாலும் மோடி லோக் ஜன சக்தி மீது வைத்துள்ள அன்பு மாறாது. இதை அடுத்து பீகாரில் அமைய உள்ள புதிய அமைச்சரவையின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...