இனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் வேண்டாம்

முடக்கநிலை நீக்கப்பட்டு விட்டாலும், கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதாக அர்த்தம் கிடையாது . நாடுமுழுக்க கொரோனா சிகிச்சை நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது,  பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது, தங்கள் கடமைகளை ஆற்ற மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்லத் தொடங்கி விட்டார்கள்.

திருவிழாக்கள் வருவதால், சந்தைகளும்கூட இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன.கடந்த 7 – 8 மாதங்களில் ஒவ்வொரு இந்தியரும் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக, இந்தியா இப்போது நல்லநிலையில் உள்ளது. இந்த சூழல் கெட்டுப் போக அனுமதித்துவிடக் கூடாது.

கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெறும் விகிதம் அதிகரித்துள்ளது, மரணம் அடைவோரின் விகிதம் குறைந்துள்ளது. 10 லட்சம் பேரில் 5500பேர் நோய் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். . அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக உள்ளது .

இந்தியாவில் 10 லட்சம் குடிமக்களுக்கு 83 என்ற எண்ணிக்கையில் மரண விகிதம் உள்ளது, அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற வளர்ச்சிஅடைந்த நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் இந்த எண்ணிக்கை சுமார் 600 .

வளர்ச்சி அடைந்த பலநாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.நாட்டில் கொவிட் பாதிப்புக்கு எதிரான சிகிச்சைக்குத் தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 90 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள், 12 ஆயிரம் தனிமைப்படுத்தல் சிகிச்சை மையங்கள் உள்ளன.

நாடுமுழுக்க கொரோனா பரிசோதனை செய்ய  2000-க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் செயல்பட்டுவருகின்றன.  விரைவில் 10 கோடி பரிசோதனைகளைக் கடந்துவிடுவோம். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெருந்தொற்று நோய்க்கு எதிரான செயல்பாட்டு பலம் அதிகரித்துள்ளது “சேவா பர்மோ தர்மா” என்ற மந்திரத்தைப் பின்பற்றி தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அலுவலர்களின் பணி பாராட்டுக்குரியது.

இவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ள நிலையில், மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது  வைரஸ் போய்விட்டது , இனிமேலும் அபாயம் நேராது என்று நினைத்துவிட வேண்டாம் .

சமீப காலமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டு விட்டனர், “நீங்கள் அலட்சியமாக இருந்து, முகக்கவசம்  இல்லாமல் வெளியில் சென்றால், நீங்களே உங்களை, உங்கள் குடும்பத்தை, குழந்தைகளை, முதியவர்களை நோய் தாக்குதலுக்கு ஆட்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதாக அர்த்தம்”.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் குறையத் தொடங்கி, பிறகு திடீரென அதிகரிக்கத் தொடங்கிஉள்ளது.  தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் மக்கள் அலட்சியமாக இருந்துவிட கூடாது.

பல்வேறு தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன, சில ஆய்வுகள் முன்னேறிய கட்டத்தில் உள்ளன.தடுப்பு மருந்து கிடைத்தவுடன், குடிமக்கள் ஒவ்வொருவருக்ரும் அதை அளிப்பதற்கான, விரிவான திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது என்

தங்கள் கடமைகளைச் செய்யும்போது குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.ஆறு அடி இடைவெளி பராமரித்தல், அவ்வப்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவுதல், முகக்கவச உறை அணிதல் ஆகிய செயல்பாடுகளை தொடர்ந்து செய்யுங்கள்.

தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர்  நரேந்திர மோடி ஆற்றிய உரை. 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...