பீகாரில் பாஜக கூட்டணிக்கு 133-143 இடங்கள்கிடைக்கும் என்று சிஎஸ்டிஎஸ்- லோக் நிதி கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்ட சபை தொகுதிக்கு, 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் தேர்தலுக்கு முந்தைய சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதன்படி, எதிர்க்கட்சி கூட்டணியான ராஷ்டிரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 88-98 இடங்களில் வெல்லவாய்ப்பு உள்ளது.
பீகாரில் பெரும்பான்மைக்கு தேவை மொத்தம் 122 இடங்கள் என்பதால், எதிர்க்கட்சி கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.
ஐக்கிய ஜனதாதளம்-பாஜக ஆளும்கூட்டணிக்கு, 133-143 இடங்கள்வரை கிடைக்க வாய்ப்புள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து போட்டியிடும், எல்ஜேபி கட்சிக்கு 2 முதல் 6 இடங்கள் கிடைக்கலாம் என்கிறது இந்த கருத்துக்கணிப்பு.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |