மெஹபூபா முஃப்தியை சிறையில் அடைக்க வேண்டும்

தேசியக் கொடி தொடர்பான ‘தேசத்துரோக’ கருத்துக்களுக்காக மக்கள் ஜனநாயக கட்சித்தலைவா் மெஹபூபா முஃப்தியை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட பிறகு, மெஹபூபா முஃப்தி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாா். ஓராண்டுக்கும் மேல் தடுப்புக் காவலில் இருந்தவா், சமீபத்தில் விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் முதல்முறையாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது, நான் தோ்தலில்போட்டியிட விரும்பவில்லை. எந்த அரசியலமைப்பின் கீழ் நான் இதுவரை தோ்தலில் போட்டியிட்டு வந்தேனோ, அந்தஅரசியலமைப்பு திரும்ப வழங்கப்படும் வரை, எனக்கு தோ்தலுடன் எந்ததொடா்பும் இல்லை என்றாா்.

இந்த பேட்டியின்போது சிறப்பு அந்தஸ்துள்ள மாநிலமாக இருந்த போது ஜம்மு-காஷ்மீா் பயன்படுத்திய கொடி மெஹபூபா முஃப்தியின் மேஜையில் இருந்தது. அதுவே தனதுகொடி என்றும், ஜம்முகாஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், நாங்கள் மூவா்ண கொடியையும் ஏந்துவோம் என்று கூறியிருந்தார்.

மெஹபூபா முஃப்தியின் பேச்சுக்கு மாநில பாஜக தலைவர் ரவிந்தர்ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், ஜம்மு-காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும், எனவே ஜம்முகாஷ்மீரில் ஒரே ஒருகொடியை மட்டுமே ஏற்ற முடியும், அதுதான் தேசியக் கொடி.” அந்த கொடியைத் தவிர வேறு எந்த கொடியையும் இந்த பூமியில் எந்த சக்தியாலும் ஏற்றமுடியாது”

தாய் மண்ணுக்காகவும், தேசத்துக்காகவும், கொடிக்காகவும் ஒவ்வொரு சொட்டுரத்தத்தையும் தியாகம் செய்வோம். “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கொடியைத் திரும்ப கொண்டு வருவதற்கும், அரசியலமைப்பின் 370 வது பிரிவை மீட்டெடுப்பதற்கும் இந்தபூமியில் யாருக்கும் வலிமையும், அதிகாரமும்” இல்லை.

இந்த சிறப்பு அந்தஸ்தால் தான் பிரிவினைவாதமும், தீவிரவாதமும் வளர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு தேசியக்கொடி ஒன்றைத்தவிர எந்தக் கொடியும் ஏற்றக்கூடாது .

காஷ்மீர் மக்களைத் தூண்டும் நோக்கில் இதுபோன்ற “தீங்கு விளைவிக்கும் பேச்சுக்களை” பாஜக ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது , மெஹபூபா முஃப்தியின் ‘தேசத்துரோக’ கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ்சின்ஹா கவனத்தில்கொண்டு, அவர் மீது தேசத்துரோக பேச்சுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேசவிரோத சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்.

“காஷ்மீர் மக்களைத் தூண்டுவரையில் பேச வேண்டாம் என முஃப்தி போன்ற தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். மாநிலத்தில் அமைதி, இயல்பு வாழ்க்கை மற்றும் சகோதரத்துவத்துக்கு எதிராக எந்த அசாம்விதங்களும் நடைபெற அனுமதிக்கமாட்டோம். அவ்வாறு ஏதாவது நடந்தால், முஃப்தி அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்,” என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவட ...

ராகுல்காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமர் நரேந்திர மோடியையும், தொழிலதிபர் அதானியையும் தொடர்பு படுத்தி ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதிய ...

கர்நாடகாவின் போர்ப்படை தளபதியாகும் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை கர்நாடக மாநிலதேர்தல் ...

விளையாட்டுத் துறையை விளையாட்ட ...

விளையாட்டுத் துறையை  விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம் ''விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகா ...

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூரு சென்ற பிரதமர்மோடி மாதவரா அருகில் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர் ...

அனைவரும் இணைவோம்-அனைவரின் வளர்ச்சிக்காக முயற்சிப்போம் பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாம் மாநிலம் பார்பேட்டாவில் ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா ...

‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி ‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.