இரண்டு இளவரசர்களுக்கும், வளர்ச்சிக்கான இரட்டை என்ஜின்களுக்கும் இடையே போட்டிநிலவுவதாக பிரதமர் மோடி பீகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்.
பீகார் சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் நடந்துமுடிந்து உள்ளது. மேலும் இரண்டு கட்டங்களாக (3 மற்றும் 10 ம் தேதிகளில்) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 10 ம் தேதி நடக்கிறது. இதனிடையே பீகாரில் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி பேசியதாவது: மத்திய , மாநிலத்தில் ஒரேகூட்டணி ஆட்சியாக இரட்டை என்ஜினாக செயல் படும் தேசிய ஜனநாய கட்சிக்கும் பீகாரில் இரண்டு இளவரசர்களுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது.
இளவரசர்களில் ஒருவர் உ.பி.,மாநிலத்தில் ஒருகூட்டணியை உருவாக்கினார். ஆனால் அங்கு கூட்டணி துடைத்து எறியப் பட்டது என ராகுலை பிரதமர் மோடி மறைமுகமாக சுட்டிக் காட்டினார். அந்த இளவரசர் தற்போது பீகாரில் முகாமிட்டுள்ளார். இவர் பீகார் இளவரசருக்கு ஆதரவை கொடுத்துள்ளார். மறுபுறம் மாநிலத்ததை இருளில் இருந்து வெளியேற்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசால் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி உள்ளது என மோடி கூறினார்
மேலும் அஜீரணக்கோளாறு, வாந்தி போன்றவற்றை உருவாக்கிய உணவை போன்று எதிர்கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளது என்றார். தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்தம் , காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது அயோத்தியில் ராமர் கோவில்,பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்டவற்றில் எதிர்கட்சிகளின் நிலை குறித்தும் பிரதமர் பேசினார்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |