பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். சிராக் பாஸ்வான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “ பிரதமர் மோடி மீதான தங்கள் நம்பிக்கையை பீகார்மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.பாஜக மீது மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதை தேர்தல்முடிவுகள் காட்டுகின்றன. இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி”எனத் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகஇடங்களை வென்றுள்ளது 243 சட்டமன்றத்திற்கு பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பின்னிரவு நீடித்த வாக்கு எண்ணும் பணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பெரும்பான்மைக்கு 122 இடங்கள்தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களையும் மெகாகூட்டணி 110 இடங்களையும் வென்றது. லோக்ஜனசக்தி கட்சி ஒரு இடத்தைக் கைப்பற்றியது. பிறகட்சிகள் 7 இடங்களில் வென்றன. இதன்மூலம், பீகாரில் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது .
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |