மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற டெல்லியில் விவசாயிகள் கடந்த இருவாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவரும் நிலையில், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தேசியளவில் 700 மாவட்டங்களில் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக கிராமங்களில் மக்களிடையே இந்த வேளாண்சட்டங்களின் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து பிரச்சாரம்செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி கடந்த 16 நாட்களாக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 5 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உடன்பாடு ஏதும் ஏற்பட வில்லை.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றபின் அடுத்த பிரச்சினைகளை ஆலோசிக்கலாம் என்றும், வரும் 14-ம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்றும் விவசாயிகள் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளைத்தவிர்த்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு தாங்கள் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களின் பலன்குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் பொதுக்கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்டவற்றை தேசியளவில் 700 மாவட்டங்களில் நடத்த முடிவு செய்துள்ளதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அரசியல் நலனுக்காகவும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த வேளாண் சட்டங்கள் மூலம் இடைத்தரகர் இல்லாமல் வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்பனைசெய்ய முடியும் என்பதே நிதர்சனம்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |