புதியவேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல் அதிகாரத்துடன் செயல்படவைக்கும்

புதியவேளாண் சட்டங்கள், விவசாயிகளை கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் செயல்படவைக்கும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டில்லி எல்லைப்பகுதியில் 22 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று (டிச.,17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குபிறகு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், புதிய சட்டங்கள் தொடர்பாக 8 பக்கத்திற்கு கடிதம் எழுதி, தனது டுவிட்டரில் பகிர்ந்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நான் ஒரு விவசாயியின் குடும்பத்தைச் சேர்ந்தவன். குழந்தை பருவத்திலிருந்தே, விவசாயிகளின் கடினமானவாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன். புதிய சட்டங்களை அமல்படுத்திய பின்னர், நாடுமுழுவதும் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். சில மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அடிப்படை ஆதாரவிலை இருக்காது என அரசியல் காரணங்களுக்காக பொய்யுரை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை மாறப்போவதில்லை.

வேளாண் துறையில் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமிடும் விதத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்த சட்டங்கள், கூடுதல் சுதந்திரத்துடனும், அதிகாரத்துடனும் விவசாயிகளை செயல்படவைக்கும். கடந்த ஆறு ஆண்டுகளில், மோடி அரசு விவசாயிகளுக்காக நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த மசோதாக்கள் மூலம், விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளை எங்குவேண்டுமானாலும் விற்க அரசு, கூடுதல் வாய்ப்பை வழங்கியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...