உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்கு தயாராகிறது

இந்தியத் தொழில்வர்த்தக கூட்டமைப்பான அசோச்சேம் (ASSOCHAM) இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவ படுத்தும் வர்த்தகச் சங்கங்களால் 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தஅமைப்பு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. மேலும், சமூக சிக்கல்களுக்கும் தனியார் அல்லது தனிநபர் முன்முயற்சிகளுக்கும் இடையில் ஒருபாலமாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பின் குறிக்கோள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதும், வர்த்தக தடைகளை குறைப்பதும், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உகந்தசூழலை வளர்ப்பதும் ஆகும்.

400 சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளைத் தன்னகத்தேகொண்ட அசோச்சேம் கூட்டமைப்பு, நாடு முழுவதுமுள்ள 4.5 லட்சம் உறுப்பினர்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் 100 ஆண்டுகள் நிறைவுவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக ‘அசோச்சேம் அறக்கட்டளை வாரம் 2020’ நிகழ்வு நேற்று தொடங்கியது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், `இந்தியாவின் விரிதிறன்: 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய ஆத்மநிர்பர் பயணம்.’

அசோச்சேம் அறக்கட்டளை வாரத்தையொட்டி நேற்று சிறப்புமாநாடு காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, ‘அசோச்சேம் நிறுவனத்தின் இந்தநூற்றாண்டின் சிறந்த நிறுவனம்’ எனும் விருதை டாடா குழுமத்தின் சார்பாக ரத்தன் டாடாவுக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது, “உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்குத் தயாராகி வருகிறது. இதனால், நமது நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய நாம் தயாராகி, அதற்கேற்பச் செயல்படவேண்டும். கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தைத் திறம்பட கையாண்டது.

உலகநாடுகள் இந்தியப் பொருளாதாரத்தை நம்புகின்றன. கொரோனா காலத்தில், உலக நாடுகள் பலதடைகளைச் சந்தித்தபோதும், இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்தது. நமதுநாடு தன்னிறைவு இந்தியாவாக மாறுவதில் மட்டும் சவால் இல்லை. அதை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பது முக்கியம். அடுத்த 27 ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய நிலையை தீர்மானிக்கும் என்பதால், திட்டமிட்டுச் செயல்பட மற்றும் தேசத்தை கட்டியெழுப்ப கவனம்செலுத்த வேண்டிய நேரம் இது.

தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்தத் துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்யவேண்டும். `ஏன் இந்தியாவில்’ என்ற நிலையிலிருந்து ‘இந்தியாவில் ஏன் இருக்கக் கூடாது’ என்ற நிலையை நோக்கி நாம் நகரவேண்டும்.

இந்தியாவின் நூற்றாண்டுகால வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. நாட்டின் பலமுக்கிய வளர்ச்சிகளில் டாடா நிறுவனத்தின் பெரும் பங்கு இருந்துள்ளது” என்று மோடி பாராட்டினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...