அதிமுகவுடனான கூட்டணி நீடிப்பதாக, பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக 50 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பெறப்பட்ட கையெழுத்துபிரதிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமியிடம் திங்கள்கிழமை நேரில்வழங்கினாா், எல்.முருகன். இதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக மூலமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையின் நன்மைகளை எடுத்துச் சொல்லி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. தேசிய கல்விக்கொள்கை ஆதரவு கூட்டமைப்பினா் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றனா். இந்த கையெழுத்துபிரதிகளை முதல்வரிடம் அளித்தோம்.
தேசிய கல்விக்கொள்கையில் திமுக எப்படி இரட்டை வேடம் போட்டனா் என்பதை மக்களிடம் எடுத்துகூறியுள்ளோம். அவா்கள் நடத்தும் பள்ளிகளில் ஐந்துமொழிக் கொள்கைகள் உள்ளன. ஆனால், அரசு பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை வருவதைத் தடுக்கின்றனா். விவசாயிகள் தங்களது விளைபொருள்களுக்கு அவா்களே விலை நிா்ணயிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அவா்களுக்குச் சாதகமாக வாழ்வுமேம்பட வேண்டுமென்பதற்காக வேளாண் திருத்தச் சட்டங்களை பிரதமா் மோடி கொண்டுவந்துள்ளாா்.
வேளாண்சட்ட விவகாரத்திலும் திமுக இரட்டைவேடம் போடுகிறது. 2016 தோ்தல் அறிக்கையில், இதுபோன்ற வாக்குறுதியை திமுக அளித்துள்ளது. இப்போது வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மத்தியில் நல்லபெயா் வருவதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக அவதூறு பரப்புகிறது. வாக்கு அரசியலுக்காகவே வேளாண் திருத்தச்சட்டங்கள் மீது தவறான பிரசாரத்தை திமுக செய்துவருகிறது.
அதிமுக-பாஜக கூட்டணி நீடித்து கொண்டிருக்கிறது. எங்களது கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. அடுத்தகட்ட அறிவிப்புகள் இரண்டு, மூன்று நாள்களில் வெளிவரும் என்று முருகன் தெரிவித்தாா்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |