பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினார்.
இதுபற்றி பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாவது:
“பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பிரிட்டன் பிரதமர் ஜான்சன் பிரதமர் மோடிக்கு நன்றிதெரிவித்தார். அதேசமயம் பிரிட்டனில் நிலவும் கரோனா சூழல் காரணமாக குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தமும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இந்தியா வருவதற்கான ஆர்வத்தினை அவர் வெளிப்படுத்தினார். பிரிட்டனில் நிலவும் தவிர்க்கமுடியாத சூழலைப் புரிந்துகொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் , பிரிட்டனில் பரவும் பெருந்தொற்றை விரைவில் கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி வாழ்த்துதெரிவித்தார்.”
முன்னதாக, பிரிட்டனில் பரவும் புதியவகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |