ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற பேரவைத்தேர்தலில் பாஜக கண்டிப்பாக வெற்றிப்பெற வேண்டும் என மதுரையில் பாஜக செய்திதொடர்பாளர் குஷ்பு பேசினார்.
மதுரை தெப்பக்குளம் நடனகோபால நாயகி மந்திர் வளாகத்தில் மதுரை மாநகர் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல்விழா இன்று நடைபெற்றது. பாஜக பொதுச்செயலர் ஆர்.ஸ்ரீநிவாசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டதலைவர் கே.கே.சீனிவாசன் வரவேற்றார்.
விழாவில் பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசியதாவது:
பிரதமர் மோடி மீது தமிழகமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். மோடியின் அனைத்து திட்டங்களும் தமிழகமக்களை சென்றடைந்துள்ளது. இதனால் பேரவை தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது.
பாஜக வளர்ந்துவருகிறது. திமுக, காங்கிரஸ் பயத்துடன் உள்ளன. இதனால் பெண்களைத் தவறாகபேசி வருகின்றனர். இரு கட்சிகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக, காங்கிரஸ் தலைவர்கள் சுத்தமானவர்கள் இல்லை. அந்தகட்சிகளில் இருந்ததால் அவர்களை பற்றி எனக்கு தெரியும். அவர்களின் வரலாறு என்னிடம் உள்ளது. ஆனால் வெளியே சொல்லமாட்டேன். பாஜகவில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.
கரோனா காலத்திலும் மக்களுக்கு உதவிய தலைவர்களில் முதலிடத்தில் பிரதமர் மோடி உள்ளார். ஊழல் குறித்து நேரடிவிவாதம் நடத்த தயாரா என முதல்வர் விடுத்தசவாலை முக.ஸ்டாலின் ஏற்கவில்லை. நேரடிவிவாதத்துக்கு மு.க.ஸ்டாலின் நிபந்தனை விதிக்கிறார்.
இது அவருக்கு அழகா? மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நினைப்பு திமுகவுக்கு இல்லை. குடும்ப அரசியலை மட்டுமே திமுக செய்கிறது.
தமிழக காங்கிரஸில் 200 பேர்மட்டுமே உள்ளனர். அனைவருக்கும் பதவி கொடுத்துள்ளனர். இருக்கிற அனைவருக்கும் பதவிகொடுத்தால் வேலை செய்வது யார்? இதனால் பாஜக கஷ்டப்பட வேண்டியதில்லை. பிரதமரின் திட்டங்களை மக்களிடம் தெரிவித்தால்போதும் வெற்றிப்பெறலாம். மக்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல், சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு கடந்த 6 ஆண்டுகளில் பிரதமர் கொண்வந்த திட்டங்கள்தான் காரணம்.
ஜல்லிக்கட்டு வேண்டாம் என்றார். ஜல்லிக்கட்டு என்றால் சும்மாவா. ஒரு நாள் மட்டும் நடத்திவிட்டு விட்டுவிடும் விழாவா? ஜல்லிக்கட்டு நமதுபாரம்பரிய விளையாட்டு. ஜல்லிக்கட்டு காளைகளை மக்கள் குழந்தைகளைபோல் வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றால் கண்டிப்பாக தேர்தலில் பாஜக வெற்றிப்பெறவேண்டும்.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மைதரும். இதனால் யார் சொல்வதையும் கேட்காதீர்கள். பிரதமர் மோடி சொல்வதை மட்டும் கேளுங்கள். மோடி நல்லதைமட்டுமே செய்வார். தமிழ்மொழி மீது பிரதமர் மோடி அக்கறையுடன் உள்ளார். இதனால் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |