இப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்

பிரதமர் நரேந்திரமோடி கோவிட் -19 தொற்று நோயை நன்கு கையாண்டார் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், அவரது மதிப்பு பலமடங்கு பெருகி உள்ளது. இப்போது இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படுமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும் என்று ஜனவரி 2021 பதிப்பின்படி இந்தியா டுடே குழுமம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 321 இடங்களில் வெற்றிபெறக் கூடும் என்றும் அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது. தேசத்தின் மனநிலை (Mood Of the Nation) என்ற தலைப்பில் நடத்திய அந்த ஆய்வில், ஜனவரி 3-ம் தேதி முதல் 13-ம்தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்ட விதம், வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

அதன்படி, கொரோனா காலத்தை மோடி அரசு கையாண்டவிதம் எப்படி? என்கிற கேள்விக்கு, 73% மக்கள் மோடி அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாக வாக்களித்துள்ள்னர். கொரோனா ஊரடங்குகாலத்தில் மாநில அரசுகளின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, 70% மக்கள் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை குறை சொல்ல வில்லை.

கொரோனா பேரிடர் காலத்தில் வருவாய் இழப்பு மற்றும் வேலையிழப்பு..? என்கிற கேள்விக்கு ‘85% மக்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பாதிப்பு’’ என பதிவாகி இருக்கிறது. கொரோனா கட்டுப் படுத்துதலில் பிறநாடுகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? என்கிற கேள்விக்கு, ஆஸ்திரேலியா -94% பேர் நன்றாக செயல் பட்டது. ஜெர்மனி -88% நன்றாக செயல் பட்டது. இந்தியா -73% சிறப்பாக செயல் பட்டது என பதிலளித்துள்ளனர்

கொரோனாவுக்கான சிகிச்சை எங்குதரமாக கிடைக்கிறது? என்பதற்கு, 61% பேர் அரசு மருத்துவமனை ஆப்ஷனை தேர்வுசெய்துள்ளார்கள். கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விருப்பமா? என்கிற கேள்விக்கு, 76% பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் என்று தெரிவித்துள்ளனர். இன்றையதேதியில் தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்கிறகேள்விக்கு, ‘’43 % பேர் தேசிய ஜனநாயக கூட்டனிக்கு வாக்களிப்போம் என பதில் அளித்துள்ளனர். அதன்படி தேசியஜனநாயக கூட்டணி 321 இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

27% பேர் மட்டுமே யு.பி.ஏ. கூட்டணிக்கு வாக்களிப்போம் என பதில் அளித்துள்ளதால் காங்கிரஸ்கூட்டணி 93 இடங்கள் வெல்லவாய்ப்பு இருக்கும் என அந்தசர்வே கூறுகிறது. 30% பேர் இதர மாநில கட்சிகளை தேர்வுசெய்துள்ளனர். பிரதமர் மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு 44% பேர் நன்றாக உள்ளது என பதில் அளித்துள்ளனர். 30% பேர் மிகச் சிறப்பு என்றும் 17% பேர் சராசரியாக செயல்படுகிறார் எனவும் 6% பேர் மிகமோசம் என பதில் அளித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...